காதலனை சந்திக்க கடல் தாண்டி வந்த அமெரிக்கப் பெண்; விமான நிலையத்தில் பார்த்ததும் ஒரு ‘ஹக்’: வைரல் வீடியோ!

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது இந்திய காதலனைச் சந்திக்க கடல் இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளார். அவர்களின் முதல் சந்திப்பின்போது விமான நிலையத்தில் அவர்கள் கட்டிப்பிடித்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது இந்திய காதலனைச் சந்திக்க கடல் இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளார். அவர்களின் முதல் சந்திப்பின்போது விமான நிலையத்தில் அவர்கள் கட்டிப்பிடித்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
us women

"காதலுக்கு எல்லைகள் இல்லை" என்பதை இந்த ஜோடி நிரூபித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது இந்திய காதலனைச் சந்திக்க கடல் இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளார். அவர்களின் முதல் சந்திப்பின்போது விமான நிலையத்தில் அவர்கள் கட்டிப்பிடித்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. "காதலுக்கு எல்லைகள் இல்லை" என்பதை இந்த ஜோடி நிரூபித்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

அமெரிக்காவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஜாக்லின் ஃபோரேரோ, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உள்ளடங்கிய கிராமத்தில் வசிக்கும் சந்தன் சிங் ராஜபுத்ரா என்பவரைச் சந்திக்கப் பயணம் மேற்கொண்டார். இன்ஸ்டாகிராமில் தொடங்கிய இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. 14 மாதங்களாக தினமும் வீடியோ கால்களில் பேசி வந்த இவர்கள், ஒருவரையொருவர் நேரில் சந்திக்க ஆவலாக இருந்தனர்.

ஜாக்லின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர்கள் வீடியோ காலில் பேசிய கிளிப்புகளையும், விமான நிலையத்தில் சந்தனை முதன்முறையாக கட்டிப்பிடித்தபோது ஏற்பட்ட உணர்ச்சிப்பூர்வமான தருணத்தையும் இணைத்து ஒரு வீடியோவை வெளியிட்டார். அதற்கு அவர், “14 மாதங்கள் ஒன்றாக... ஒரு பெரிய புதிய அத்தியாயத்திற்குத் தயாராக உள்ளோம்” என்று தலைப்பிட்டார்.

Advertisment
Advertisements

இந்த வீடியோவைப் பாருங்கள்: 

இந்த பதிவு இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. பலரும் இந்த ஜோடியின் காதலைப் பாராட்டியும், தங்களது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்தும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒருவர் கூறுகையில், “எங்கள் கதையும் இதுபோலத்தான் - நாங்கள் இன்ஸ்டாவில் சந்தித்தோம். ஏழு மாதங்களுக்குப் பிறகு நான் அவரை மணக்க இந்தியாவுக்குப் பறந்தேன்! அது 3.5 வருடங்களுக்கு முன்பு, அவர் கடந்த ஏப்ரிலில்தான் அமெரிக்காவுக்கு வந்தார். இது ஒரு பைத்தியக்காரத்தனமான பயணம், ஆனால், மிகவும் மதிப்புமிக்கது.” என்றார்.

மற்றொருவர், “என் கணவர் கேரளாவைச் சேர்ந்தவர். நாங்கள் சந்தித்தபோது அவர் டெல்லியில் வசித்து வந்தார், இப்போது நாங்கள் ஏழு வருடங்களுக்கும் மேலாக திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் இருக்கிறோம். இது அழகாக இருந்தது, ஆனால், மிகவும் கடினமானது. கலாச்சார வேறுபாடுகள் அதிகம்... அது மதிப்புக்குரியது, ஆனால், ஒரு வலுவான அடித்தளத்துடன் தயாராக இருங்கள்.” என்று வெவ்வேறு கலாச்சார காதலின் சவால்களைப் பற்றி குறிப்பிட்டார்.

மூன்றாவது பயனர், “நீங்கள் உலகின் மிக அழகான குழந்தைகளைப் பெறப் போகிறீர்கள். இதைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது” என்று வாழ்த்தினார்.

ஜாக்லினும், ராஜபுத்ராவும் தங்களது உறவு தொடர்பான தருணங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவர்களின் யூடியூப் சேனலின் சுயவிவரம் அவர்களின் வழக்கத்திற்கு மாறான காதல் கதையை விவரிக்கிறது:  “விவாகரத்தான கிறிஸ்தவ தாய் ஒருவர், நம்பிக்கையை மையமாகக் கொண்ட அன்பைக் கண்டுபிடிக்க போராடுகிறார். அப்போது ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு தொலைதூர கிராமத்தில் வசிக்கும் ஒரு இளைஞனை இன்ஸ்டாகிராமில் சந்திக்கிறார்... ஜாக்லின் மற்றும் சந்தனின் கதை, உலகத் தரத்தின்படி ஒன்றுமில்லாத ஒரு மனிதன், கடவுளின் இதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதனுக்காக ஏங்கிய ஒரு பெண்ணுக்கு எல்லாவற்றையும் வழங்க முடியும் என்பதை காட்டுகிறது.”

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: