Advertisment

உலக அக்வாட்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி: ரஹ்மான் பாடலுக்கு நீருக்கு அடியில் அமெரிக்க கலை நீச்சல் குழு டான்ஸ்: வீடியோ

2024 ஆம் ஆண்டுக்கான உலக அக்வாட்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தோஹாவில் பிப்ரவரி 02-18 வரை நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
taal se taal arr

2024 உலக அக்வாட்டிக்ஸ் சாம்பியன்ஷிப் பிப்ரவரி 02-18 வரை தோஹாவில் நடந்தது. (Image source: Express collage)

ஆஸ்கார் விருது பெற்ற இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தனது ஆத்மார்த்தமான இசையமைப்பால் தலைமுறையினரைக் கவர்ந்தவர். 'மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ்' என்று அன்புடன் அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் சமீபத்தில், உலக அக்வாட்டிக்ஸ் சாம்பியன்ஷிப் தோஹா 2024 (World Aquatics Doha 2024) போட்டியில், ஏ.ஆர். ரஹ்மானின் பிரபலமான பாடல் ‘தால் சே தால்’ பாடலை அமெரிக்க கலை நீச்சல் குழுவினர் பாடுவதைக் காட்டும் வீடியோ இணையத்தில் இதயங்களை வென்று வருகிறது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Watch: USA artistic swimming team performs AR Rahman’s ‘Taal Se Taal’ at World Aquatics Doha, video goes viral

'தால் சே தால்'  பாடலின் இசை ஸ்டேடியத்தில் இசைக்கப்படும்போது, ​​நீச்சல் வீராங்கனைகள் நீருக்கடியில் அற்புதமாக ஒத்திசைவுடன் நடனம் ஆடியா வீடியொ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அல்கா யாக்னிக் மற்றும் உதித் நாராயண் பாடிய இந்தப் பாடலில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அக்ஷய் கண்ணா நடித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள கலை நீச்சல் குழு அவர்களின் நடிப்பிற்காக ஏ.ஆர். ரஹ்மானின்  ‘தால் சே தால்’ பாடலைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஆகஸ்ட் 4-ம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோ ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. ஏனெனில், பல சமூக ஊடக பயனர்கள் இது மிகப்பெரிய ஸ்டைல் என்று பாராட்டினர். இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒரு எக்ஸ் பயனர், “தால் சே தால் பாடல் எந்தவொரு கலாச்சார நிகழ்வுக்கும் பொருத்தமானது. உண்மையிலேயே இந்திய இசையின் முகம்” என்று கருத்து தெரிவித்தார். 

மற்றொரு பயனர் எழுதினார்,  “இந்த பாடலைப் பார்த்து மகிழ்ச்சியாக உணர்ந்தேன், ஆனால் அவர்கள் அதை எப்படி செய்கிறார்கள் பாருங்கள்.. தண்ணீரில் சமநிலையில் இருப்பது நகைச்சுவையல்ல.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“குளத்தில் என்ன அற்புதமான ஒத்திசைவு டான்ஸ், அழகாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது” என்று மற்றொரு எக்ஸ் பயனர் பாராட்டியுள்ளார்.

முழு வீடியோ இணைப்பு இதோ:


2024-ம் ஆண்டுக்கான உலக அக்வாட்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தோஹாவில் பிப்ரவரி 2-18 வரை நடைபெற்றது. அக்ரோபாட்டிக் பைனலில் ஆர்ட்டிஸ்டிக் நீச்சலில் சீன மக்கள் குடியரசு தங்கப் பதக்கத்தைப் பெற்ற நிலையில், உக்ரைன் மற்றும் அமெரிக்கா முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Dance Ar Rahman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment