விளையாட்டு வினையானது : கடலில் தத்தளித்து கடைசி நேரத்தில் உயிர்தப்பிய புதுமண தம்பதி

இந்த மீட்புநடவடிக்கையின்போது, அவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்று லாஸ்ஏஞ்சல்சிஸிலிருந்து வெளியாகும் ஏபிசி7 பத்திரிகையின் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By: Published: July 2, 2020, 4:16:55 PM

புதிதாக திருமணமான தம்பதிகள், தங்களது போட்டோஷூட்டை கடலில் நடத்த தீர்மானித்து பின் அவர்களை பாதுகாப்புபடையினர் மீட்டெடுத்த வீடியோ, டிரெண்டிங் ஆனதோடு மட்டுமல்லாது, சமூகவலைதளங்களில் வைரலாகவும் பரவிவருகிறது.

போட்டோஷூட்டில், புதுமைகளை விரும்புபவர்களுக்கு இந்த வீடியோ, தக்க பாடமாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லகுனா பீச், போட்டோஷூட்கள் அதிகம் நடைபெறும் பகுதி ஆகும். இங்குள்ள டிரசர் ஐஸ்லாண்ட் பீச் பகுதியில், பெரும்பாலான படங்களின் சூட்டிங்குகள், வெட்டிங் போட்டோஷூட்கள் போன்றவை இப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும்.

புதிதாக திருமணமான தம்பதி, ஒருபடிமேலே சென்று, தங்களது வெட்டிங் போட்டோஷூட்டை கடலில் சென்று நடத்திக்கொண்டிருந்தது. சிறிதுநேரத்தில், அவர்கள் இருந்த திசையிலிருந்து அபயக்குரல் கேட்கவே, பாதுகாப்புபணியில் இருந்த படையினர் துரிதமாக செயல்பட்டு அவர்களை மீட்டு கரையில் கொண்டுவந்து சேர்த்தனர்.

மீட்புபணியில் இருந்த ஒருவரின் வீடியோ பதிவில் இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடலின் நடுவிற்கு சென்ற அவர்களால், ராட்சத அலைகளை எதிர்கொள்ள இயலாமல் தத்தளித்தனர். பின் அவர்கள் உதவுமாறு கூக்குரல் எழுப்பியதையவுடுத்து அவர்களை உயிர்காக்கும் படையினர் மீட்டுள்ளனர்.
இந்த மீட்புநடவடிக்கையின்போது, அவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்று லாஸ்ஏஞ்சல்சிஸிலிருந்து வெளியாகும் ஏபிசி7 பத்திரிகையின் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இவர்கள் மட்டுமல்லாது, அனைவரும் போட்டோவுக்காக தேவையற்ற ரிஸ்க்குகளை எடுக்க வேண்டாம் என்று நெட்டிசன்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Couple’s wedding photoshoot by the sea ends with lifeguards having to rescue them

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Usa california trending wedding photoshoot gone wrong couple swept off sea

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X