Advertisment

’போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க’: இப்படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்: இதை இனி பின்பற்றலாம்: அமைச்சர் அட்வைஸ்

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு கூகுள் மேப்பில் அலர்ட் கொடுத்துள்ளார் பயனர் ஒருவர் . இந்நிலையில் இந்த இடம் சென்னையில் இருந்துள்ளதால் நெட்டிசன்கள் கவனத்தை பெற்றது.

author-image
WebDesk
New Update
sasasa

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு கூகுள் மேப்பில் அலர்ட் கொடுத்துள்ளார் பயனர் ஒருவர் . இந்நிலையில் இந்த இடம் சென்னையில் இருந்துள்ளதால் நெட்டிசன்கள் கவனத்தை பெற்றது. 

ஹெல்மெட் இருவருக்கும் கட்டாயம் என்ற விதி பல  ஆண்டுகளாக இருந்தாலும், பின்பற்றுபவர்கள் குறைவாக உள்ளனர். சமீப காலங்களில் சென்னை நகரத்தில் அதிகரித்துவரும் இருசக்கரவாகன ஓட்டிகளின் உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு, ஹெல்மெட் இருவருக்கும் கட்டாயம் என்பதை உறுதிப்படுத்த சாலைகளில் சோதனை நடத்தப்படும் என்றும், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

பயனர் ஒருவர் கூகுள் மேப் செயலியில் வேளச்சேரியை ஒட்டிய பகுதி ஒன்றில் ’ போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை முழுவதும் இத்தகைய முயற்சியை  கையாளலாம் என போக்குவரத்து போலீசாருக்கு நகைச்சுவையாக அறிவுறுத்தி உள்ளார். 

Advertisment

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment