இந்திய ராணுவத்தில் சேரணும்... தினமும் இரவில் ஆபீஸில் இருந்து வீட்டுக்கு 10 கி.மீ ஓடிக் கடக்கும் இளைஞர்!

5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவை, ஃபிலிம் மேக்கர் வினோத் கப்ரி பதிவு செய்துள்ளார்.

5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவை, ஃபிலிம் மேக்கர் வினோத் கப்ரி பதிவு செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Pradeep Mehra viral video

Pradeep Mehra viral video

நள்ளிரவில் நொய்டா சாலையில் 19 வயது இளைஞன் வேகமாக ஓடும் வீடியோ சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா?

Advertisment

ஆம். ஊக்கமளிக்கும் அவரது கதை, நம் அனைவரின் கவனத்திற்கும் தகுதியானது.

நம் வாழ்வில் ஏற்படும் சிறு அசௌகரியங்களை நினைத்து, நாம் தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கையில், இந்த உத்தரகாண்ட் இளைஞன் பிரதீப் மெஹ்ரா, தனது கனவை மெய்யாக்குவதற்காக தினமும் ஓடிக்கொண்டிருக்கிறான்.  

அப்படி ஒரு சமயம், நடைபாதையில் பிரதீப் ஓடுவதை பார்த்த’ ஃபிலிம் மேக்கர் வினோத் கப்ரி, அவர் போகும் இடத்திற்கு லிஃப்ட் கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் பிரதீப், தான் வியர்வையில் நனைந்த போதிலும் வேண்டாம் என்று பணிவுடன் மறுத்துவிட்டார்.

Advertisment
Advertisements

இது வினோத்துக்கு மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தியது, மேலும் இந்த பையனைப் பற்றி தெரிந்து கொள்வதில், அவர் ஆர்வமாக இருந்தார். எனவே, கார் ஓட்டிக் கொண்டே, அந்த இளைஞனிடம், வினோத் பேசத் தொடங்கினார்.

அப்போதுதான், நள்ளிரவில் 10 கிமீ ஓடுவதற்கான காரணத்தை அந்த இளைஞர் வெளிப்படுத்தினார்.

McDonald's Sector 16ல் வேலை முடிந்த பிறகு, வீட்டிற்கு ஓடி செல்வதாக பிரதீப் கூறினார்.

இப்படி வழியெல்லாம் ஓடறதுக்கான காரணம் என்னன்னு கேட்டபோது, ​​“ராணுவத்துல சேர்றதுக்கு” . எனக்கு காலையில் பயிற்சி செய்ய நேரமில்லை, தினமும் காலை 8 மணிக்கு எழுந்து, வேலைக்கு செல்லும் முன் உணவு சமைக்க வேண்டும் என்று பிரதீப் கூறினார்.

இளைஞர் பிரதீப், நொய்டாவின் செக்டார் 16ல் உள்ள தனது அலுவலத்தில் வேலை முடிந்த பிறகு’ பரோலாவில் உள்ள அவரது வீட்டிற்கு தினமும் 10 கி.மீ தூரம் ஓடுகிறார், அங்கு அவர் தனது தம்பியுடன் தங்குகியிருக்கிறார். அவரது தாயார் உடல்நிலை சரியில்லாமல் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த வைரல் வீடியோவை இங்கே பாருங்கள்:

இந்த இளைஞனின் உறுதியையும், துணிவையும் கண்டு இணையம் பிரமித்துள்ளது. சில பயனர்கள் அவரது வெற்றிக்காக பிரார்த்தனை செய்தனர். பிரதீப்பின் கதையை முன்வைத்ததற்காக, ஃபிலிம் மேக்கர் வினோத் கப்ரிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: