வைரல் வீடியோ : காவல்துறையில் பயிற்சி எடுக்கும் உள்ளூர் நாய்! இது வேற லெவல்!

இதர நாட்டு நாய்களைப் போன்றே இந்த நாயும் தன்னுடைய முழுத்திறமையை வெளிப்படுத்துகிறது – நெகிழும் நெட்டிசன்கள்!

Uttarakhand Police trains stray dog
Uttarakhand Police trains stray dog

Uttarakhand Police trains stray dog : மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆஷா என்ற ப்ரவுன் கலர் நாய் காவல்துறையில் மோப்பப் பணிகளுக்காக சேர்க்கப்பட்டது. இந்திய பாதுகாப்பு பிரிவில் இடம் பெற்றிருக்கும் முதல் உள்நாட்டு நாய் ஆஷா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உத்திரகாண்ட் மாநில காவல்துறையிலும் புதிதாக ஒரு தெரு நாய் சேர்க்கப்பட்டுள்ளது.

அதற்கு கொடுக்கப்படும் பயிற்சிகள் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது உத்தரகாண்ட் காவல்துறை. பொதுவாக வெளிநாட்டு நாய்களான ஜெர்மென் ஷெப்பர்ட் மற்றும் லேப்ரடார்கள் மட்டுமே இது போன்ற பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டு வந்த போது உத்தரகாண்ட் மாநிலத்தில் புது முயற்சியாக உள்ளூர் இன நாய்க்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்…மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

உத்தரகாண்ட் காவல்துறை வெளியிட்டிருக்கும் அத 1.14 நிமிட வீடியோவில் அக்ரோபெடிக் சண்டைகள் மற்றும் உயரம் தாண்டி இலக்கை அடைதல் போன்ற கடினமான பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனை சமூக வலைதளத்தில் பதிவு செய்யவும் நெட்டிசன்கள் மத்தியில் ஹிட் அடித்திருக்கிறது இந்த வீடியோ.

சில ட்விட்டர் பயனாளர்கள் இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளனர். இதர நாட்டு நாய்களைப் போன்றே இந்த நாயும் தன்னுடைய முழுத்திறமையை வெளிப்படுத்துகிறது என்றும் பலர் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Uttarakhand police trains stray dog for their squad

Next Story
வினோதமாக பறவையின் தோற்றத்தில் வேற்றுக்கிரக வாசிகள்? வைரல் வீடியோAliens like birds, Aliens video viral, வேற்றுக்கிரக வாசிகள், வீடியோ வைரல், owls like aliens, ஆந்தைகள், owls, aliens viral Video reached 12 million viewers, Aliens like birds but owls
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com