New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/20/weKuJRz5rs0q0FoMFxRb.jpg)
வைபவ் சூர்யவன்ஷியால் இணையத்தில் வைரலான மீம்கள்!
14 வயதில் வைபவ் சூர்யவன்ஷி ஐ.பி.எல். தொடரில் அறிமுகமானதைத் தொடர்ந்து இணையத்தில் அவரை பற்றிய மீம்கள் வைரலாகின. குறிப்பாக 14 வயதில் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம்? என்று நெட்டிசன்கள் கிண்டலாக மீம் பகிர்ந்து வருகின்றனர்.
வைபவ் சூர்யவன்ஷியால் இணையத்தில் வைரலான மீம்கள்!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் 14 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் செய்யப்பட்டு முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். இதனை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கியுள்ள தரமான மீம்ஸை பார்க்கலாம்.
ராஜஸ்தான் அணி ஐபிஎல் ஏலத்தில் ரூ.1.10 கோடி கொடுத்து 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி எனும் வீரரை வாங்கியிருந்தது. அந்த வைபவ் சூர்யவன்ஷியை நேற்று இம்பாக்ட் வீரராக அறிமுகம் செய்தது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் இளம் வயதில் அறிமுகமான வீரர் எனும் பெருமையை வைபவ் பெற்றார். ராஜஸ்தான் அணியில் முதல் பாதியில் பெஞ்சில் இருந்த வைபவ், சாம்ஸனுக்கு ஏற்பட்ட காயத்தால் இந்தப் போட்டியில் வாய்ப்புப் பெற்றார்.
ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து ஆட்டத்தைத் தொடங்கிய வைபவ் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஷர்துல் தாக்கூர் பந்தில் சிக்ஸருக்கு பறக்கவிட்டு அனைவரையும் வியக்க வைத்தார், அதன்பின் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரியும் அடித்தார். 14 வயதில் ஐபிஎல் போட்டியில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷியை புகழ்ந்து கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை பதிவிட்டுள்ளார்.
Woke up to watch an 8th grader play in the IPL!!!! What a debut! https://t.co/KMR7TfnVmL
— Sundar Pichai (@sundarpichai) April 19, 2025
அதே சமயம் சென்னை அணியில் எடுக்கப்பட்ட திரிபாதி, ஹூடா போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்காத காரணத்தால் வைபவ் சூர்யவன்ஷியுடன் அந்த வீரர்களை ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.
வின்னர் படத்தில் எல்லோரும் ஜாலியாக சிரித்து கொண்டிருக்கும் போது, திடீரென நம்பியார் வடிவேலுவை கன்னத்தில் அரைவார். எதுக்குயா அடிக்கிற? என்று கேட்டால், சும்மா ஜாலிக்கு என்பார். நேற்றைய ஆட்டத்தில் அறிமுகமான சூர்யவன்ஷி 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய போது கண்ணீர் சிந்தினார்.
இதனை ஒப்பிட்டு வடிவேலுவாக தீபக் ஹூடா, ராகுல் திரிப்பாட்டியையும், நம்பியராக சி.எஸ்.கே. ரசிகர்களையும் மாற்றி, சடாரென ஜாலிக்கு அரைவதாக மீம் உருவாக்கப்பட்டுள்ளது.
டிக்கிலோனா படத்தில் சந்தானத்திடம் லொள்ளுசபா மாறன், "குமாரு.. நீ என்ன இன்னும் பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கல்ல" என்பார். இதில் வரும் லொள்ளு சபா மாறனை ஹெட்மயராகவும், சந்தானத்தை ராஜஸ்தான் அணியாகவும் மாற்றி, "நீங்க இன்னும் என்ன ஃபினிஷர்னு நம்பிட்டு இருக்கீங்களா" என்று மீம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியன் 2 படத்தில் சித்தார்த் தாய் உயிரிழந்த பின், அவரின் குழுவினர் "கோ பேக் இந்தியன்" என்று ட்ரெண்ட் செய்ய தொடங்கிவிடுவார்கள். அதில் சித்தார்த் குழுவினரை ராஜஸ்தான் ரசிகர்களாக மாற்றி, கோ பேக் ஹெட்மயர்.. தங்கத்தை தேடும் ஆசையில் பட்லர் என்ற வைரத்தை தொலைத்துவிட்டதாக மீம் உருவாக்கப்பட்டுள்ளது.
சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவா கண்ணீர்விட்டு அழும்போது, "தம்பி அழுகாதப்பா.. நீ அழுதனா நானும் அழுதுருவேன்பா" என்று ஞானபிரகாசம் சொல்லுவார்.. இதில் வரும் ஜீவாவாக 14 வயதாகும் சூர்யவன்ஷியாக மாற்றி, "தம்பி.. அழுகாதப்பா.. நீ அழுதனா நானும் அழுதுருவேன்பா" என்று மீம் உருவாக்கப்பட்டுள்ளது.
பரிதாபங்கள் வீடியோவில் வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் மகனை பக்கத்து வீட்டு ஜூனியர் பையனுடன் ஒப்பிட்டு சுதாகர் வெளுத்து கட்டுவார். அதில் பக்கத்து வீட்டு பையனாக வைபவ் சூர்யவன்ஷியையும், சுதாகரின் மகனாக ராகுல் திரிப்பாட்டியையும் மாற்றி, பவர் பிளேவில் 2 சிக்ஸ்தான் அடிச்சேன் அங்கிள்.. எதே 2 சிக்ஸா.. என்ன வயசு என்று சுதாகர் கேட்பதாகவும், அதற்கு 14 வயசு அங்கிள் என்று வைபவ் சூர்யவன்ஷி சொல்வதாக மீம் உருவாக்கப்பட்டு உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.