உன் இடையோ உடுக்கை; உன் மார்போ??? இது என்ன கவிதை?

இரவில் போன் செய்து ஆபாச கவிதை வாசித்தீர்களே..அந்த கவிதை ஞாபகம் இருக்கிறதா

கவிஞர் வைரமுத்து மீது கல் வீசுவது தொடர்கிறது. அவரை மையப்படுத்தி ஒரு கவிதை ஆடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது அவரை திட்டமிட்டு அவதூறுகளுக்கு உள்ளாக்கும் செயல் என கவிஞர் தரப்பில் கொதிக்கிறார்கள். அதேசமயம், சின்மயி தரப்பில் தங்களுக்கான மேலும் ஒரு ஆதாரமாக இதை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாடகி சின்மயி துவங்கி வைத்த மீடு விவகாரம் இப்போது நாடே பற்றி எரியும் அளவிற்கு சென்று விட்டது. பிரபலங்கள் மீது வைக்கப்படும் அடுத்தடுத்த குற்றச்சாட்டுக்கள் சமூக வலைத்தளங்களில் பட்டியல் போல் நீண்டுக் கொண்டே செல்கிறது.

சின்மயி துவக்கி வைத்த இந்த மீடூ விவகாரத்தில் தொடர்ந்து பல பெண்கள் தங்களது அனுபவத்தையும் பகிர்ந்து வருகின்றனர். இந்த தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசிய வைரமுத்து, வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார் என்று வீடியோ பதிவை வெளியிட்டார்,

இந்த நிலையில் பெண் ஒருவர் பேசிய ஆடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில் பேசும் அந்த பெண், நான் என் தோழிக்காக பேசுகிறேன். என் தோழி உங்களிடம் ஆட்டோகிராப் வாங்க வந்தார். அப்போது அவரிடம் செல்போன் நம்பர் கேட்டீர்கள் . தகப்பன் வயதுடையவர்தானே என்ற எண்ணத்தில் என் தோழியும் செல்போன் நம்பரை கொடுத்தார்.

அதனை வாங்கிய நீங்கள் இரவில் போன் செய்து ஆபாச கவிதை வாசித்தீர்களே..அந்த கவிதை ஞாபகம் இருக்கிறதா. உன் இடுப்போ உடுக்கை… உன் மார்போ படுக்கை என்று ஆபாசமாக கவிதை கூறியது ஞாபகம் உள்ளதா? சத்தியமாக இது உங்கள் கவிதை தான். இதனை நிருபிக்கவும் தயாராக உள்ளோம் என்று பேசியுள்ளார்.

இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தோழி சார்பாக சமூக வலைதளங்களில் இந்த ஆடியோவை பதிவிட்டவர் யார்? அது நிஜமான ஐ.டி.யா? ஃபேக் ஐ.டி.யா? என கேள்விகள் எழுகின்றன. வைரமுத்துவை திட்டமிட்டு அவதூறு செய்யும் நோக்குடன் இதுபோன்ற ஆடியோ பரப்பப்படுகிறதா? என்கிற கேள்வியும் எழுகிறது.

இதுக் குறித்து வைரமுத்து தரப்பிலும் விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்த ஆடியோவை சின்மயி புகாருக்கு வலு சேர்க்கும் ஒரு அம்சமாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பரை பதவி விலக வைத்த மீடூ விவகாரம், தமிழ்நாட்டில் யார் தலையை எல்லாம் உருட்டப் போகிறதோ?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close