Optical illusion game: காதலர் தினம் நெருங்கிவிட்டதால் கொண்டாட காதலர்கள் தயாராகி வரும் சூழலில், ஆப்டிகல் இல்யூஷன் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன, அதனால், காதலர் தின ஸ்பெஷல் ஆப்டிகல் இல்யூஷன் வெளியாகி காதலர்களையும் நெட்டிசன்களையும் ஈர்த்து வருகிறது.

இந்த காதலர் தின சிறப்பு ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் மறைந்திருக்கும் 7 இதயங்களைக் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் ரொமான்ஸ் நிறைந்த பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் நிஜமாகவே ரொமாண்ட்டிக்கானவர்தான். ஏனென்றால், ரொமான்ஸ் நபர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல வகைகளாக உள்ளன. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சி அல்லது ஓவியத்தை பார்க்கும்போது மூளை எப்படி புரிந்துகொள்கிறது என்பதை செய்து மனதை மயக்கி திகைக்க வைக்கும். ஒரு படத்தை அல்லது காடிச்யைப் பார்க்கும்போது பொதுவாக மனித மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான விஷயங்களைப் பார்க்க முடியும் என்பது உண்மை. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனோ பகுப்பாய்வுத் துறையில் ஒரு பகுதியாக உள்ளது. அதனால், ஒரு காட்சியை நீங்கள் எப்படிப் பார்த்து உணர்கிறீர்கள் என்பதைக் காட்டுகின்றனர்.
இந்த ஆண்டு காதலர் தின கொண்டாட்டத்துக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காதலர் தினத்தைக் கொண்டாட காதலர்கள் தயாராகி வருகிறார்கள். அவர்களுக்காக, இந்த காதலர் தின ஸ்பெஷல் ஆப்டிகல் இல்யூஷன் சவால் விடப்படுகிறது.

இயற்கை அழகு மிளிரும் இந்த ஓவியம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஓவியம் ஜிம் வாரன் என்ற ஓவியரால் ஒரு புதிராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை காட்சியில் குளம் அருகே நிற்கும் ஒரு காதல் ஜோடியும் அவர்களைச் சுற்றி 7 இதயங்களும் மறைந்திருக்கின்றன. அந்த 7 இதயங்கள் எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் ரொமான்ஸ் பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நிஜமாகவே நீங்கள் ரொமான்ஸ் நபர்தான். ஏனென்றல், ரொமாண்ட்டிக் நபர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்க ரொமாண்ட்டிக்கானவரா என்பதை தெரிந்துகொள்ள 7 இதயங்கள் தெரிகிறதா பாருங்கள்.
இந்த காதலர் தின ஸ்பெஷல் ஆப்டிகல் இல்யூஷன் புதிரில், நீங்கள் இந்நேரம் 7 இதயங்களையும் கண்டுபிடித்து ரொமான்ஸ் நபர் என்பதை நிரூபித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு காதலர் தின வாழ்த்துகள்.
ஒருவேளை உங்களால் இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் 7 இதயங்களையும் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக அந்த 7 இதயங்கள் எங்கே இருக்கிறது என்பதைக் காட்டுகிறோம் பாருங்கள்.

*ஒரு இதயம் மேகத்தில் மறைந்துள்ளது.
*ஒரு இதயம் இரண்டு மரங்களுக்கு இடையில் மறைந்துள்ளது.
*ஒரு இதயம் குளத்தில் மறைந்துள்ளது.
*மற்றொரு இதயம் மேகத்தில் மறைந்துள்ளது
*அன்னப்பறவைகள் இடையே ஒரு இதயம் மறைந்துள்ளது
*ஒரு இதயம் பாறையில் மறைந்துள்ளது
*இதய வடிவிலான பலூன் புல் மீது கிடக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“