Valentines day trending news : நாற்பது வருட மண வாழ்க்கைக்கு பிறகு நான் என்னுடைய வாழ்வில் மீண்டும் “சிங்கிள்” ஆவேன் என்று நினைக்கவில்லை. அதே போன்று 73 வயதில் மீண்டும் மற்றொரு காதலில், கொரோனா தொற்றுக்கு மத்தியில் வீழ்வேன், என்றும் நினைக்கவில்லை என்று கேரல் எச்.மெக் என்ற அட்டர்னி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
உலகம் முழுவதும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்ற இந்த நாளில், இந்த ட்வீட் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த ஒரு ட்வீட்டை கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்து தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். எனக்கு உங்களைத் தெரியாது. உங்களுக்கும் என்னை தெரியாது. ஆனாலும் உங்களின் இந்த செய்தி கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என்று பலர் ட்வீட்டிற்கு கமெண்ட் செய்துள்ளனர். மேலும் பலர், இன்னும் சிங்கிளாதாங்க இருக்கேன்… ஏன் கடுப்பேத்துறீங்க மை லார்ட் என்ற ரீதியில் தங்களின் ஆதங்கத்தினையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த வயதிற்கு மேல் வாழ்வில் உற்ற துணையை இழப்பது கடினமானது தான். ஆனாலும் நீங்கள் அதில் இருந்து மீண்டுவிட்டீர்கள் என்று ஒருவர் ட்வீட் செய்ய, நான் என்னுடைய முன்னாள் கணவரை இழக்கவில்லை. அவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்று தெரிந்தவுடன் அவரை துரத்திவிட்டேன் என்று பதில் அளித்துள்ளார் அந்த பெண்மணி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil