/indian-express-tamil/media/media_files/4MPt6SxlirjonDDu1BPg.jpg)
பொங்கலை வரவேற்கும் விதமாகவும், கொங்கு நாட்டு பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் கோவையில் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 150-க்கும் மேற்பட்ட சிறுமியர், பெண்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நடனம் ஆடினர்.
கொங்கு நாட்டு பாரம்பரிய கலைகளில் முக்கியமான கலையாக கருதப்படுவது வள்ளி கும்மியாட்டம். அழிந்து வரும் வள்ளி கும்மியாட்ட கலையை மீட்டெடுக்கும் விதமாக இளம் தலைமுறையினர் தற்போது இக்கலைகளை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திரளான பெண்கள் கூடி மேள தாளத்திற்கு ஏற்ப கிராமிய பாடல்களுக்கு நடனமாடி மகிழ்வது விழா காலங்களில் தனிச்சிறப்பு.
இந்த நிலையில் பொங்கலை வரவேற்கும் விதமாக கோவை பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் மணியகாரன்பாளையம் சிம்மக்குரல் கலைக் குழுவின் வள்ளிக் கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி சின்னவேடம்பட்டி பகுதியிலுள்ள கௌமார மடாலயம் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
கோவையில் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி: 150 பேர் பங்கேற்று நடனம் #Coimbatorepic.twitter.com/EeMMpEqgmv
— Indian Express Tamil (@IeTamil) January 15, 2024
முன்னதாக பம்பை இசைக்கு ஏற்றபடி கிராமிய பக்தி பாடல்களை பாட அதற்கு ஏற்றாற் போன்று சிறுமியர்கள் மற்றும் இளம்பெண்கள் வண்ண உடைகளுடன் காலில் சலங்கை கட்டி ஒருசேர நடன அசைவுகளை வெளிப்படுத்தினர். இது அங்கு கூடியிருந்த பார்வையாளர்களுக்கு விருந்தளித்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை திரளானோர் கண்டு களித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.