New Update
/
வால்பாறையை அடுத்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
வால்பாறை அடுத்த கேரள எல்லையளான அதிரப்பள்ளி பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் தொடர் பெய்த கனமழையின் வெள்ளப்பெருக்கு வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நீர்வீழ்ச்சியானது தமிழ் - தெலுங்கு - கன்னடம் - ஹிந்தி - மற்றும் பிற மொழி திரைபடங்களில் இந்த நீர்வீழ்ச்சி இடம் பெற்றுள்ளது.
தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள மக்களுக்கு அறிமுகமான நீர்வீழ்ச்சியாகும்.
வால்பாறை அடுத்த அதிரப்பள்ளி பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு வீடியோ pic.twitter.com/padKRrXx2K
— Ellappan (@EllappanYa43462) June 27, 2024
இந்தப் பகுதியில் வால்பாறை சோலையார் அணையில் இருந்து திறந்து விடப்படுகின்ற தண்ணீர் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைகளில் பெருக்கெடுத்து வரும் ஆற்றுத் தண்ணீர் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அடைகிறது.
இதனால் அப்பகுதியில் அதிக அளவில் கரைபுரண்டு ஓடும் வெள்ள பகுதியை சுற்றிப் பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.