Watch video: Kabali Elephant Threatens Electricity Workers in Valparai Tamil News
கோவை: வால்பாறை அருகே உள்ள சாலக்குடி, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் சாலைகளில் கடந்த ஒரு மாதமாக வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை கபாலி. இது பேருந்துகளை மறித்தும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் துரத்தியது. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Advertisment
இந்நிலையில், சோலையார் அணை மின்சார வாரிய குடியிருப்பு பகுதிக்கு வந்த கபாலி அப்பகுதியில் நின்று கொண்டிருந்த மின்சார ஊழியர்களை மிரட்டியுள்ளது. அதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.