வால்பாறையில் பிடிபட்ட சிறுத்தை கூண்டில் இருந்து சீறிப்பாய்ந்து ஓடி மறைந்தது: வைரல் வீடியோ

வால்பாறையில் பிடிக்கப்பட்ட சிறுத்தை டாப்ஸ்லிப்பில் விடுவதற்காக சாலை மார்க்கமாக 407 வேனில் கொண்டு சென்று டாப்ஸ்லிப் யானை குந்தி அடர்ந்த வனப் பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

வால்பாறையில் பிடிக்கப்பட்ட சிறுத்தை டாப்ஸ்லிப்பில் விடுவதற்காக சாலை மார்க்கமாக 407 வேனில் கொண்டு சென்று டாப்ஸ்லிப் யானை குந்தி அடர்ந்த வனப் பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

author-image
WebDesk
New Update
leopard release

சிறுத்தை கூண்டில் இருந்து சீறிப்பாய்ந்து தப்பித்தோம், பிழைத்தோம் என வேகமாக சென்று அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்று மறைந்தது.

வால்பாறையில் பிடிக்கப்பட்ட சிறுத்தை டாப்ஸ்லிப்பில்  விடுவதற்காக  சாலை மார்க்கமாக 407 வேனில் கொண்டு சென்று டாப்ஸ்லிப் யானை குந்தி அடர்ந்த வனப் பகுதியில் பத்திரமாக விடப்பட்டது. 

Advertisment

கோவை மாவட்டம், வால்பாறை பச்சமலை எஸ்டேட் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 7 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று தாய் கண் முன்னே கவ்விச் சென்றது. நீண்ட தேடலுக்குப் பின்பு சிறுமியின் பாதி உடல் வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. 

இந்நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க வனத் துறையினர் வால்பாறையில் கூண்டு வைத்து இருந்தனர். இதனை அடுத்து இன்று காலை 5 மணி அளவில் சிறுத்தை கூண்டில் அகப்பட்டது. அந்த சிறுத்தையை டாப் ஸ்லிப் அல்லது வரகளியார்  அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத் துறையினர் திட்டமிட்டதை அடுத்து சிறுத்தை  மினி லாரி மூலம் வால்பாறையில் இருந்து ஆழியார், ஆனைமலை சேத்துமடை  சாலை வழியாக  கொண்டு சென்று டாப்சிலிப் அருகே உள்ள யானை குந்தி அடர்ந்த வனப்பகுதியில் கூண்டில் இருந்து பத்திரமாக திறந்து விடப்பட்டது.

டாப்சிலிப் அருகே உள்ள யானை குந்தி அடர்ந்த வனப்பகுதியில் கூண்டில் இருந்து விடப்பட்ட சிறுத்தை சீறிப்பாய்ந்து வேகமாக ஓடி மறைந்தது! #viralvideo

Posted by IETamil on Thursday, June 26, 2025
Advertisment
Advertisements

சிறுத்தை கூண்டில் இருந்து சீறிப்பாய்ந்து தப்பித்தோம், பிழைத்தோம் என வேகமாக சென்று அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்று மறைந்தது.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: