பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட தற்போது கோடை வெயில் தாக்கத்தினால் வனப்பகுதி ஒட்டி உள்ள தனியார் எஸ்டேட் பகுதிகளில் நீர்நிலைகளை தேடி காட்டு யானைகள் உலா வருகிறது.
ஆழியார் அணை,சோலையார் அணை,காடம்பாறை,அப்பர் ஆழியார் நீர் தேடி வருகிறது. காட்டு யானை கூட்டங்கள் நீர்நிலையில் தேடி வருவதால் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் காட்டு யானைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு வராமல் இருக்க கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறை அருகே தனியார் எஸ்டேட்டுக்கு சொந்தமான சாலையை ஒற்றைக் காட்டு யானை கடக்க முயன்றது. அப்போது வனத்துறையினர் சாலையைக் கடக்க வழி விட்டதால் தனியா எஸ்டேட் தேயிலை தோட்டத்துக்கு சென்ற ஒற்றைக் காட்டு யானை வனத்துறையினருக்கு தும்பிக்கை தூக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி போன்று ஸ்டைலாக மரியாதை செலுத்தியது. தற்போது அந்த யானையின் நடமாடத்தை வன துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
#WATCH || வால்பாறை: சாலை கடக்க உதவிய வனத்துறையினர்… சலாம் போட்டு சென்ற காட்டு யானை – வீடியோ!https://t.co/gkgoZMIuaK | #valparai | #Coimbatore | #elephant pic.twitter.com/NAzTYnpNqC
— Indian Express Tamil (@IeTamil) March 9, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil