New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/02/tamil-indian-express-2023-02-04T111408.275.jpg)
Wild elephant stopped Government Bus near valparai, Coimbatore
வால்பாறை அதிரப்பள்ளி சாலையில்கேரளா அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Wild elephant stopped Government Bus near valparai, Coimbatore
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
வால்பாறை அருகில் உள்ள கேரள மாநில எல்லை பகுதியான மளுக்கப்பாறை பகுதியில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் அடர்ந்த வனப் பகுதியில் கபாலி ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது.
இந்த நிலையில், மளுக்கப்பாறை-சாலக்குடி வனப்பகுதி சாலையில் ஆணக்காயம் மற்றும் அம்பலப்பாறை இடைப்பட்ட பகுதியில் கடந்த 10 நாட்களாக காட்டு யானை வழியில் செல்லும் வாகனங்களை துரத்துவது சாலையை விட்டு இறங்கி வனப் பகுதிக்குள் செல்லாமல் நீண்ட நேரம் சாலையில் நிற்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது.
இதனால் பேருந்து மற்றும் இருசக்கர நான்கு சக்கர வாகன பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் உயிர் பயத்தில் பயணம் செய்ய வேண்டிய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH || வால்பாறை: அரசு பேருந்துக்கு கேட்டு போட்ட கபாலி யானை: பீதியில் ரீவர்சிலே சென்ற ஓட்டுநர் - வீடியோ!https://t.co/gkgoZMIuaK | #Valparai | #elephants pic.twitter.com/LAK8ZPz9GU
— Indian Express Tamil (@IeTamil) February 4, 2023
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.