பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இந்தப் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டமாக சென்றுள்ளன. சில நேரங்களில் நியாய விலைக் கடைகள்,தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதியில் வீடுகளை இடித்து சேதப்படுத்த வருகின்றன. பகல் நேரங்களில் குடியிருப்பு பகுதியில் வராமல் இருக்க வனத்துறையினர் மற்றும் வேட்டு தடுப்பு காவலர்கள் அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு காட்டு யானைகளை விரட்டி வருகின்றனர்.

இதையடுத்து, வால்பாறை அருகே உள்ள பாரி ஆக்ரோ இண்டஸ்ட்ரீஸ் சொந்தமான தேயிலைத் தோட்ட பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள் உலாவதால் தேயிலைத் தோட்டம் தொழிலாளர்கள் பணி செய்ய முடியமல் அச்சத்துடன் உள்ளனர். தொழிலாளர்கள் காட்டு யானைகளை கூச்சலிட்டு விரட்டினர் மேலும் வனத்துறையினர் காட்டு யானைகள் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
#WATCH || வால்பாறை: தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் ஜாலியாக உலாவி வரும் காட்டு யானைகள் – வீடியோ!https://t.co/gkgoZMIuaK | #Valparai | #Coimbatore | #elephants pic.twitter.com/yu7WhBKDTu
— Indian Express Tamil (@IeTamil) February 3, 2023
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil