Valparai: ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நிரந்தரமாக கூட்டங்களாகவும் தனியாகவும் நடமாடி வருகிறது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் நிழல் தேடி காட்டு யானைகள் செல்கிறது.
வால்பாறை அருகே உள்ள புது தோட்டம் தனியார் எஸ்டேட்டில் குட்டியுடன் இருக்கும் யானைகள் ஓய்வு எடுக்கும் வீடியோவை அப்பகுதி தேயிலைத் தோட்ட தொழிலாளர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#VIDEO || ஹாயாக தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுக்கும் காட்டு யானைகள் – வீடியோ!https://t.co/gkgoZMIuaK | #Valparai | #Elephant | #Coimbatore pic.twitter.com/nl4HUbMBjR
— Indian Express Tamil (@IeTamil) March 24, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil