வண்டலூர் ஏரியை புதுப்பித்து பாராட்டுக்களை அள்ளும் ஐ.எப்.எஸ் அதிகாரி

உண்மையில், அந்த அதிகாரியின் செயல்பாடு  ட்வீட்டரில்  வைரலானது  என்ற ஒற்றை வார்த்தையில் சுருக்காமல் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

By: Updated: December 7, 2019, 12:32:53 PM

இந்திய வனப் பணி  அதிகாரி சமீபத்தில் சென்னையில் பெய்த மழையால் ஏரி ஒன்று எவ்வாறு உயிர்ப்பிக்கப்பட்டது என்பதற்கான வீடியோவையும், புகைப்படங்களையும்  தனது ட்விட்டர் அக்கவுண்டில் பகிர்ந்து கொண்டார்.  உண்மையில், அந்த அதிகாரியின் செயல்பாடு  ட்வீட்டரில்  வைரலானது  என்ற ஒற்றை வார்த்தையில் சுருக்காமல் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இந்திய வனத்துறை அதிகாரியான இவர் வெற்றிகரமாக வண்டலூர் மிருகக்காட்சி சாலை என்று அழைக்கப்படும் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவிற்குள்  உள்ள ஏரியை வெற்றிகரமாக புதுப்பித்திருக்கிறார்.  சில ஆண்டுகளாகவே பற்றாக்குறை மழையைப் பெற்று வந்த இந்த எரி ஒரு வருடத்திற்கு முன்பு வறண்டுவிட்டது. இதனால் அங்கு பொதுவாக வரும் பறவைகள் கூட்டமும் குறையத் தொடங்கின.  இதனை கவனத்தில் கொண்ட  சுதாராமன்(வனப் பணி  அதிகாரி),வடகிழக்கு பருவ மழைக்கு முன்பு ஏரியை  புத்துயிர் பெறுவதற்கான அனைத்து வேலைபாடுகளிலும் இறங்கியுள்ளார்.

 

 

தனது ட்விட்டரில்,”   இப்போது தண்ணீரும் பறவைகளும் திரும்பி வந்துள்ளன, எங்கள் புன்னகையும் கூட. வேலை மகிழ்ச்சியாக இருக்கிறது, ”என்று தனது கருத்துக்களோடு  வீடியோ ஒன்றையும் பதிவேற்றியுள்ளார்.

இது எப்படி சாத்தியம், இதை நீங்கள் எவ்வாறு செய்து முடித்தீர்கள், எங்களுக்கும் சொல்லுங்கள் நாங்களும் இது போன்ற வேளைகளில் இறங்குகிறோம் என்று ட்விட்டரில் அனைத்து மக்களும் ஆர்வமாய் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

இதற்கு பதிலளித்த சுதாராமன் ,  நீர்நிலைகளை தூர்வாருவது, வடிகால் தடங்களை மேன்மைபடுத்துவது  கரைகளுக்கு அருகே பூர்வீக மரங்களை நடவு செய்வது போன்ற  கடின உழைப்பின் மூலம் இது சாத்தியமே என்று பதில் கூறியிருக்கிறார். மேலும், வடகிழக்கு பருவமழை எங்களுக்கு மிகவும் உதவி புரிந்தது என்றும் கூறியுள்ளார்.

ட்விட்டரில், நடந்த ஆக்கப்பூர்வமான உரையாடல்களை இங்கே காணலாம்.

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Vandalur zoo lake rejuvenated by ips officer lake revived video officer video goes viral and earns praise

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X