பிக்பாஸ் வனிதாவா இது? ஆச்சரியப்படும் நெட்டிசன்கள்; புகைப்படங்கள் வைரல்

பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்துகொண்ட நடிகை வனிதா விஜயகுமார், தனது மகள்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் இது நம்ம பிக்பாஸ் வனிதாவா என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

By: January 16, 2020, 10:24:04 PM

பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்துகொண்ட நடிகை வனிதா விஜயகுமார், தனது மகள்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் இது நம்ம பிக்பாஸ் வனிதாவா என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் சந்திரலேகா படத்தின் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்த வனிதா பின்னர், பட வாய்ப்புகள் குறைந்து திருமணம் செய்துகொண்டார்.

வனிதா விஜயகுமாருக்கு தற்போது இரண்டு மகள்கள் உள்ளனர். திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்த வனிதா விஜயகுமார், கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் – 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

பிக்பாஸ் சீசன் -3 சுவாரசியமாகவும் பரபரபாகவும் இருந்ததற்கு வனிதா விஜயகுமார் காரணமாக இருந்தார் என்றால் அது மிகையல்ல.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் முடிவில் வனிதா விஜயகுமாருக்கு தைரியமான போட்டியாளர் என்ற பட்டத்தை பெற்றார்.

வனிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது, அவருடைய மகள்கள் நிகழ்ச்சிக்கு வந்தபோது அவர்கள் பார்வையாளர்களுக்கு அறிமுகமானார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, வனிதா விஜயகுமாருக்கு சில முன்னணி தொலைக்காட்சிகளில் வாய்ப்புகள் வரத்தொடங்கியது. இப்பொது வனிதா விஜயகுமார் தன்னை பிஸியாக வைத்துக்கொண்டுள்ளார்.

View this post on Instagram

Iniya tamizhar thirunaal nalvaazhthukkal

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on


இந்த நிலையில், வனிதா விஜயகுமார் பொங்கல் பண்டியையையொட்டி, தனது இரண்டு மகள்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்தில், வனிதா விஜயகுமார் தனது எடையை ரொம்பவும் குறைத்து சந்திரலேகாவில் அறிமுகமான வனிதா போல தோற்றமளிக்கிறார். இதனால், இந்த புகைப்படத்தைப் பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் இது நம்ம பிக்பாஸ் வனிதாவா என்று ஆச்சரிப்படுகின்றனர். மேலும், வனிதாவின் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பொங்கல் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ச்சி தெரிவித்து வருவதால் அவருடைய புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Vanitha vijayakumar with daughters pongal wishes instagram photos viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X