அசத்தல் நடனம்; வைரலான வரலட்சுமி சரத்குமார்!

தெலுங்கில் வெளியான ‘நாந்தி’ மற்றும் ‘கிராக்’ ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் படங்களாக அவருக்கு அமைய, தொடர்ந்து ஒப்பந்தமாகியுள்ள படங்களின் பட்டியல், ரணம், காட்டேரி, பாம்பன், யானை என நீள்வதால் உச்சபட்ச சந்தோசத்தில் உள்ளாராம் வரலட்சுமி.

தமிழ் சினிமாவில் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்திருந்தாலும், தனக்கான அங்கீகாரத்தைப் பெற்று, ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருகிறார் வரலட்சுமி சரத்குமார். வரலட்சுமி நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘நாந்தி’ மற்றும் ‘கிராக்’ ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் படங்களாக அவருக்கு அமைந்தது. அதுமட்டுமல்லாது, அவர் ஒப்பந்தமாகியுள்ள படங்களின் பட்டியல், ரணம், காட்டேரி, பாம்பன், யானை என நீள்வதால் உச்சபட்ச சந்தோசத்தில் உள்ளாராம் வரலட்சுமி.

இந்நிலையில், சரத்குமாரின் அண்ணனான சுதர்சனின் மகன் ராம்குமாரின் திருமண விழாவில் கலந்துக் கொண்ட வரலட்சுமி, சமீபத்தில் ஹிட் அடித்த ‘வாத்தி கம்மிங்’ மற்றும் ‘எஞ்சாய் எஞ்சாமி’ ஆகிய பாடல்களுக்கு, தங்கை பூஜாவோடு உற்சாகத்துடன் நடனமாடிய வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். வரலட்சுமியின் நடன வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, அவர் அணிந்திருந்த பாரம்பர்ய உடை பெண்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Varalakshmi sarathkumar viral dance video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com