தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்த பற்றி எரியும் பரபரப்பான அரசியல் செய்திகளை எல்லாம் இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிட்டு தொடர்ந்து 2 நாட்களாக விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் டாப்பில் இருந்து வருகிறது.
இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படமும் ஹெச். வி்னோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி திரையரங்குகளை திணறடித்திருகிறது. ரசிகர்களின் ஆரவாரமான கொண்டாட்டம் பார்ப்பவர்களை மிரள வைத்திருக்கிறது.
விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெற்றதா வாரிசா? துணிவா என்று சமூக ஊடகங்களில் சம்பவம் செய்து வருகிறார்கள். பாக்ஸ் ஆஃபீஸ் முதல் நாள் கலெக்ஷன் தகவல்கள் வெளியான நிலையில், வாரிசு மற்றும் துணிவு படங்களைப் பற்றிய மீம்ஸ்கள் நேற்று முதலே சமூக ஊடகங்க்ளில் இறெக்கைக் கட்டி பறந்து வருகின்றன.

விஜய்யின் வாரிசா அஜித்தின் துணிவா என்று மீம்ஸ்கள் வெளியாகி வரும் நிலையில், வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள ராஷ்மிகா மந்தண்ணா பற்றி பேசப்படவே இல்லை. நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தண்ணா நடித்தை யாரும் கண்டுக்கவே இல்லை என்பதை குறிப்பிடும் விதமாக, ‘நான் ஒரு நேஷனல் க்ரஷ் நடிச்சிருக்கேன்; எவனாவது கண்டுக்கிறானா பாரு! என்று மீம்ஸ்களும் வெளியாகி கலக்கி வருகிறது.

இது போல, வாரிசு மற்றும் துணிவு படங்கள் தொடர்பாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் கலக்கி வரும் மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.






“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“