By: WebDesk
Updated: November 17, 2020, 09:00:21 PM
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி கலக்கிய தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி நடிகர் விஜய்யை சந்தித்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வருண் சக்ரவர்த்தி தீவிர விஜய் ரசிகர் என்று தெரிவித்திருந்தார்.
துபாயில் நடந்து முடிந்த 2020 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியவர் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய வருண் சக்ரவர்த்தி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். தல தோனியின் விக்கெட்டையும்கூட வீழ்த்தினார். ஐபிஎல் தொடரின்போது விஜய் சக்ரவர்த்தி தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வீடியோவும் வைரலானது.
ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி ரசிகர்களை ஈர்த்த வருண் சக்ரவர்த்தி பேட்டிகளில் தான் நடிகர் விஜயின் தீவிரமான ரசிகர் என்றும் அவரைச் சந்திக்க ஆசை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் பட்டியலில் வருண் சக்ரவர்த்தி பெயரும் இடம்பெற்றது. ஆனால், அவர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி நடிகர் விஜய்யை சந்தித்து அவருடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிருந்துள்ளார். வருண் சக்ரவர்த்தி – விஜய் சந்திப்பு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படம் குறித்து வருண் சக்ரவர்த்தி குறிப்பிடுகையில், “உள்ளே வந்தா பவரடி.. அண்ணா யாரு? தளபதி” என்று தெரிவித்துள்ளார்.
தீபாவளி அன்று வெளியான விஜயின் மாஸ்டர் படத்தின் டீசரில் இறுதியில் விஜய் – விஜய் சேதுபதி இருவரின் கைகளும் மோதிக்கொள்ளுவது போல அமைந்திருக்கும். அதே போல, வருண் சக்ரவர்த்தி – விஜய் கைகள் மோதிக்கொள்வது போல எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, #VarunChakravarthy பெயரும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
நடிகர் விஜயை சந்தித்த கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்திக்கு விஜய் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook
Web Title:Varun chakravarthy meets vijay photo goes viral