Advertisment

காதலியைக் கரம் பிடித்த கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர்; திருமண புகைப்படங்கள் வைரல்!

கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுருதி ரகுநாதன் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

author-image
WebDesk
New Update
Venkatesh Iyer

கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுருதி ரகுநாதன் திருமணப் புகைப்படங்கள் Source: x

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய கிரிக்கெட் அணி வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை வெல்வதற்கு காரணமான தமிழகத்தைச் சேர்ந்தவருமான வெங்கடேஷ் ஐயர், தனது நீண்ட நாள் காதலியான சுருதி ரகுநாதனை இன்று திருமணம் கொண்டார். 

Advertisment

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தமிழகத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் அவரது காதலி சுருதி ரகுநாதனுக்கு பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இருவருக்கும் அவர்களின் குடும்ப பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுருதி ரகுநாதன் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஐபிஎல் 2024 கோப்பையை வென்ற சில நாட்களுக்குப் பிறகு, அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் ஸ்ருதி ரகுநாதனை ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டார். வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுருதி ரகுநாதனுக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், இருவரின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படங்களில், வெங்கடேஷ் ஐயர், வேட்டி அணிந்து மணமகளுக்கு மாலை அணிவிப்பதைக் காணலாம். திருமணத்திற்காக, சுருதி ரகுநாதன் அழகான தங்க நிற எம்பிராய்டரியுடன் கூடிய அசத்தலான நீல நிற புடவையை உடுத்தியிருந்தார். புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, ஒரு எக்ஸ் பயனர், “வெங்கடேஷ் ஐயர் ஸ்ருதியை திருமணம் செய்து கொள்கிறார். – இருவருக்கும் வாழ்த்துகள்!’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயருக்கு வாழ்த்து தெரிவித்ததால் இந்த பதிவு 1,83,000 பார்வைகளைப் பெற்றது.  “வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஸ்ருதி ரகுநாதனின் திருமணத்திற்கு வாழ்த்துக்கள், அவர்கள் ஒன்றாக அழகான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்” என்று ஒரு எக்ஸ் பயனர் எழுதினார்.  
“வாழ்த்துகள் சாம்பியன் வெங்கடேஷ் ஐயர்” மற்றொரு பயனர் கூறினார்.

சுருதி ரகுநாதன் யார்?

சுருதி ரகுநாதன் பெங்களூருவில் உள்ள லைஃப் ஸ்டைல் ​​இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் மெர்சண்டைஸ் பிளானராக பணிபுரிகிறார்.

இவர் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனது பி.காம் பட்டப்படிப்பை முடித்தார். மேலும், தேசிய ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் (NIFT) ஃபேஷன் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

venkatesh iyer
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment