scorecardresearch

குட்டி யானைகளின் அழகான ஃபிரன்ட்ஷிப்… மனதைக் கொள்ளை கொள்ளும் வைரல் வீடியோ

தமிழ்நாட்டில், ஆனைமலை புலிகள் காப்பக்கத்தில் இரண்டு குட்டிய யானைகள் நட்புடன் தும்பிக்கைகளை முட்டிக்கொள்ளும் அழகான மனதைக் கொள்ளை கொள்ளும் ஃபிரண்ட்ஷிப் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Very beautiful baby elephants cheers video, baby elephants cheers, குட்டி யானைகளின் அழகான ஃபிரன்ஷிப், மனதைக் கொள்ளை கொள்ளும் வைரல் வீடியோ, யானைக் குட்டி வைரல் வீடியோ, Anamalai Tiger reserve, tamil nadu, elephant, Supriya Sahu IAS

வன விலங்குகளில் மிகப் பெரிய விலங்கான யானைகள் மனிதர்களை மிகவும் ஈர்க்கும் விலங்கினமாக உள்ளது. தமிழ்நாட்டில், ஆனைமலை புலிகள் காப்பக்கத்தில் இரண்டு குட்டிய யானைகள் நட்புடன் தும்பிக்கைகளை முட்டிக்கொள்ளும் அழகான மனதைக் கொள்ளை கொள்ளும் ஃபிரண்ட்ஷிப் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வனவிலங்குகள் என்றால் மனிதர்கள் இடையே எப்போது ஒரு ஆர்வம் இருந்துகொண்டே இருக்கிறது. அதற்கு காரணம், மனிதர்களால் வன விலங்குகளை நெருக்கமாகப் பார்க்க முடியாது. அதனால் தான், வனவிலங்குகள் வீடியோவைப் பார்க்க மனிதர்கள் அவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்.

சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை போன்ற விலங்குகளின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானாலே உடனடியாக ஆயிரக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து எக்கச்சக்கமாக வைரலாகி வருகின்றன.

இந்திய வனத்துறை உயர் அதிகாரிகளான ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் மற்றும் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வன விலங்குகளைப் பற்றிய வீடியோக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி பதிவிடப்படும் வீடியோக்கள், நெட்டிசன்கள் மத்தியில் வனவிலங்குகளைப் பற்றிய புரிந்தலையும் விழிப்புணர்வையும் ஏஎற்படுத்துகின்றன. அப்படி நாள்தோறும் பல அழகான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ்நாட்டில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குட்டி யானைகள் நட்புடன் தும்பிக்கைகளை முட்டிக் கொள்ளும் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. குட்டி யானை சுதந்திரமாக சுற்றித் திரிந்ததாலும், அதை தாய் யானை கண்காணித்துக் கொண்டே இருப்பது வியக்க வைக்கிறது.

இந்த வீடியோவை ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை தானுபரன் என்பவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ கிளிப்பில், தமிழ்நாட்டின் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஒரு அழகான குட்டி யானை தாய் யானை உள்ளிட்ட குடும்பத்துடன் இருக்கிறது. அழகான குட்டி யானை புல் தரையில் சுற்றி சுற்றி ஓடிப் பார்க்கிறது. அந்த அழகான யானைக் குட்டி ஓடிக்கொண்டிருக்கும்போது, அதன் தாய் யானை குட்டி யானை கண்காணிக்கின்றன.

இந்த குட்டியானை விளையாடிக் கொண்டிருக்கும்பொது அங்கே இன்னொரு குட்டி யானை தாய் யானை உடன் வருகிறது. இரண்டு குழந்தைகள் சந்தித்துக்கொண்டால் எவ்வளவு குதூகலத்துடன் மகிழ்வார்களோ அதே போல, இரண்டு குட்டி யானைகளும் தும்பிக்கையால் நட்புடன் முட்டிக் கொள்கின்றன. பின்னர், இரண்டு குட்டி யானைகளும் அங்கே இருந்து ஒன்றாக செல்கின்றன. இந்த வீடியோ பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாக குட்டி யானைகள் மிகவும் அழகாக இருக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Very beautiful baby elephants cheers in tn forest video goes viral