New Update
/indian-express-tamil/media/media_files/216Ohv1xieyStBhkYxZE.jpg)
இந்த பெண் ‘தௌபா... தௌபா’ பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவைப் பார்த்த விக்கி கவுஷலே பிரமித்துப்போயுள்ளார்.
இந்த பெண் ‘தௌபா... தௌபா’ பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவைப் பார்த்த விக்கி கவுஷலே பிரமித்துப்போயுள்ளார்.
பேட் நியூஸ் படத்தில் கரண் அவுஜ்லாவின் பஞ்சாபி நடனப் பாடலான 'தௌபா தௌபா'-வில் விக்கி கௌஷலின் டான்ஸ் செம மாஸ். ‘தௌபா... தௌபா’ பாடலின் நடன அசைவுகளைப் பார்ப்பவர்கள் யாரும் வைப் செய்யாமல் இருக்கவே முடியாது.
பஞ்சாபி பாப் பாடகர் கரன் அவுஜ்லாவால் இசையமைத்து எழுதப்பட்டு, பாடப்பட்டதுதான் இந்த “தௌபா தௌபா” பாடல், விக்கி கவுஷல், கரண் மற்றும் ட்ரிப்தி டிம்ரி நடனத்துடன் படமாக்கப்பட்டது. போஸ்கோ மார்டிஸ் நடனம் அமைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான விக்கி கவுஷல் மற்றும் ட்ரிப்தி நடித்த காதல் நகைச்சுவை படமான பேட் நியூஸ் படத்தில் இறுதி பாடலாக இடம்பெற்றுள்ளது.
இந்த படத்தில் இடம்பெற்ற ‘தௌபா... தௌபா’ பிரபலமானதைத் தொடர்ந்து, இந்த பஞ்சாபி பாடல் நடனத்தைப் பார்த்து உலகம் முழுவதும் பலரும் அதே போல, நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் ரீல் செய்து வருகின்றனர். பலரும் அதே போல ஆட முயற்சி செய்து வருகின்றனர், ஆனால், ஒரு சிறிய ஓட்டு வீட்டில் வசிக்கும் சேலை கட்டிய ஒரு பெண், ‘தௌபா... தௌபா’ பாடலுக்கு சிறுவர்களுடன் ஆடிய நடனத்தின் இன்ஸ்டாகிராம் வீடியோ மிகப் பெரிய அளவில் வைரலானது. இந்த பெண் ‘தௌபா... தௌபா’ பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவைப் பார்த்த விக்கி கவுஷலே பிரமித்துப்போயுள்ளார்.
ரூபாலி சிங் என்ற பெயரில் உள்ள @sad_rupaa என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘தௌபா... தௌபா’ பாடலுக்கு அந்த பெண் நடனம் ஆடுகிற ரீல் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இந்த ரீல்ஸ் வீடியோவில் தௌபா தௌபாவுக்கு நடனமாடுகிறார். மஞ்சள் அச்சிடப்பட்ட புடவை அணிந்து ஒரு சிறிய ஓட்டு வீட்டின் முன் ஆடுகிறார். அவருடைய ஒப்பற்ற உற்சாகத்தை பிரதிபலிக்கும் வகையில் அந்த பெண்ணின் குழந்தைகளும் அவருடன் நடனமாடுகிறார்கள்.
இந்த வீடியோவை பார்த்த் விக்கி கவுஷல், “ஆஹா!” என்று வியந்து கருத்து தெரிவித்துள்ளார். அந்த பெண்ணின் அட்டகாசமான டான்ஸ் ஸ்டெப்ஸ் விக்கி கவுஷலின் கவனத்தைப் பெற்றன.
இந்த வீடியோவைப் பார்த்த இன்ஸ்டா பயனர் ஒருவர், “அடடா (தீ ஈமோஜி) அத்தைக்கு சில நல்ல டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.