Advertisment

வீடியோ: பாக்குத் தோட்டத்தில் புகுந்த 9 அடி ராஜ நாகம்; போராடி மீட்ட கோவை வனத் துறை

Coimbatore Forest Department catch 9 feet king cobra, after hours of fighting Tamil News: மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை நந்தவனம் பகுதியில் பிடிபட்ட 9 அடி நீள ராஜநாகத்தை போராடி மீட்ட வனத்துறை அதிகாரிகள், அதை பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர்.

author-image
WebDesk
New Update
Video: 9 feet king cobra caught by Coimbatore Forest Department after hours of fighting

Coimbatore Forest Department - 9 feet king cobra Tamil News

Coimbatore News in Tamil: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள நெல்லித்துறை ஊராட்சியானது அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிகளில் யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றனர். இந்த வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடும் சூழலும் உள்ளது.

Advertisment

இந்நிலையில், இன்று நெல்லித்துறை நந்தவனம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாக்குத்தோப்பில் ராஜநாகம் ஒன்று உள்ளதாக மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் அங்கிருந்த சுமார் 10 அடி நீளமுள்ள அரிய வகை ராஜநாகத்தை லாவகமாக மீட்டனர். இந்த ராஜநாகமானது ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில் மட்டுமே வசிக்க கூடியவை. அதிக விஷத்தன்மை கொண்டவை.

இதனை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடனும்,ஆச்சர்யத்துடனும் பார்த்தனர். பின்னர், அதனை மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட நெல்லித்துறை அடர்வனப்பகுதியில் ஈரப்பதம் அதிகமுள்ள இடத்தில் பத்திரமாக விடுத்தனர் வனத்துறையினர். ஊருக்குள் புகுந்த அரிய வகை ராஜநாகத்தை மீட்டு அடர் வனப்பகுதிக்குள் விடுவித்ததால் அப்பகுதிமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Viral Coimbatore Viral Video Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment