New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/10/tamil-indian-express-2022-10-08T140032.924.jpg)
Coimbatore Azhiyar Dam shining with electric lights Tamil News
Coimbatore Azhiyar Dam Tamil news: பரம்பிக்குளம் ஆழியார் பாசன தினத்தை முன்னிட்டு ஆழியார் அணை முழுவதும் மின்விளக்குகளால் அலகரிக்கபட்டு ஜொலிக்கிறது.
Coimbatore Azhiyar Dam shining with electric lights Tamil News
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்
Coimbatore News in Tamil: பரம்பிக்குளம் ஆழியார் பாசன தினம் முன்னிட்டு வண்ண விளக்கில் ஜொலித்த ஆழியார் அணை.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை உட்பட 10 அணைகள் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் கட்டபட்டது. இதில் விவசாயத்து முக்கிய பங்குவகிக்கும் அணை ஆழியார் அணையாகும். இந்த அணை மறைந்த முன்னால் முதல்வர் காமராஜரால் 1957 ஆம் ஆண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1962ல் அணை திறக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலை வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழையால் வனப்பகுதி வழிய ஆழியார் அணைக்கு நீர் வருகிறது. 120 அடி கொண்ட அணையில் தற்போது 117 அடி வரை நிரம்பி உள்ளதால் எட்டு மதகுகள் வழியாக நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாய நிலங்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு அணையின் நீர் பயன்படுத்தபடுகிறது. மேலும் அணையின் மறுபுறம் ஆழியார் பூங்காவும் உள்ளது.
இந்நிலையில், பரம்பிக்குளம் ஆழியார் பாசன தினத்தை முன்னிட்டு ஆழியார் அணை முழுவதும் மின்விளக்குகளால் அலகரிக்கபட்டு ஜொலிக்கிறது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கவரும் விதமாக உள்ளது எனவும் வால்பாறை செல்லும் வழியில் உள்ள 9 வது வளைவில் அணையின் காட்சியை பார்த்தால் பிரமிப்பாக உள்ளது அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH || வீடியோ: மின்விளக்குகளால் ஜொலிக்கும் ஆழியார் அணை...! https://t.co/gkgoZMqkWC | #coimbatore | #pollachi | 📹 @rahman14331 pic.twitter.com/QuvaKs7zId
— Indian Express Tamil (@IeTamil) October 8, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.