By: WebDesk
March 4, 2018, 12:26:51 PM
தன்னுடைய சின்னஞ்சிறு குட்டியை காப்பாற்றுவதற்காக கரடி ஒன்று புலியுடன் ஆக்ரோஷமாக சண்டையிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மஹராஷ்டிராவில் உள்ள ததோபாவில் வன ஆர்வலர் அக்ஷய் குமார் என்பவர், மதிய நேரத்தில் வனப்பகுதியையொட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த கரடி குட்டியை புலி ஒன்று தாக்க முற்பட்டட்து. அந்த கரடியை புலி கொன்று தின்றிவிடும் என நாம் எதிர்பார்த்திருந்த நேரத்தில், அந்த குட்டிக்கரடியின் தாய் வந்து புலியுடன் சண்டையிட்டது. அதுவும் ஆக்ரோஷமாக.
இந்த சண்டையை அக்ஷய் குமார் முழுவதுமாக வீடியோ எடுத்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இருவரில் யார் ஜெயிப்பார் என்ற ஆர்வத்தை இந்த சண்டை நம்மிடையே நிச்சயம் ஏற்படுத்தும்.
அந்த விறுவிறுப்பான புலி-கரடி சண்டை காட்சியை பார்க்க தவறிவிடாதீர்கள்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Video bear vs tiger who will win this deadly fight will bring back the jungle book memories