New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/12/roof-jumper-fall_759_youtube-dans-le-monde.jpg)
சீனாவில் 62 மாடி கட்டடத்தின் மேற்கூரையில் நின்று புல்-அப் செய்த சாகச வீரர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதன் வீடியோ வெளியாகியுள்ளது.
சீனாவில் 62 மாடி கட்டடத்தின் மேற்கூரையில் நின்று புல்-அப் செய்த சாகச வீரர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை பதபதைக்கும் அதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
சீனாவை சேர்ந்த சாகச வீரர் வூ யோங்னிங் என்பவர், ஹூவாயூன் சர்வதேச மையம் என்ற 62 மாடி கட்டடத்தின் மேற்கூரையில், அந்தரத்தில் தொங்கிக்கொண்டு புல்-அப் எடுத்து சாகசம் புரிய முயற்சி செய்தார். அப்போது, கை நழுவி, பிடிமானம் ஏதுமின்றி அவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
இவர், சீனாவில் பல திரைப்படங்களில் துணை நடிகராகவும் பணிபுரிந்துள்ளார். அந்த கட்டடத்தில் பணிபுரிந்த ஒருவர் அவரது உடலை கண்டெடுத்த போதுதான் வூ யோங்னிங் உயிரிழந்தது தெரியவந்தது.
மேலும், தன்னுடைய இந்த சாகசத்தை கட்டடத்தின் மற்றொரு முனையில் கேமராவை பொருத்தி அவர் வீடியோவாக எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த நவம்பர் 8-ஆம் தேதியே அவர் உயிரிழந்தாலும், டிசம்பர் 8-ஆம் தேதிதான் அவரது இறப்பு உறுதிபடுத்தப்படுகிறது.
மேலும், இந்த சாகசத்தின் மூலம் அவருக்கு ரூ.7 லட்சம் கிடைக்க இருந்ததாகவும், அதன் மூலம் தன் காதலிக்கு பரிசளிக்க இருந்ததாகவும், அவரது காதலி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.