வைரல் வீடியோ : மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்... மேடையில் எப்படி ஆடுவதென்று!

உலகம் முழுவதும் பெரும்பாலான பெண்கள் தங்களின் தந்தையையே முதல் ஹீரோ என்று பெருமையாக கூறுவார்கள். அத்தகைய பெருமைக்குரிய விஷயத்தை, உண்மை என்று நிரூபித்திருக்கிறார் வெளிநாட்டில் ஒரு தந்தை.

பெர்முடா நாட்டில் உள்ள ஹாமில்டன் சிட்டி ஹாலில்,பேலே நடன நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனியார் நடன பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பலரும் பேலே நடனமாடினார்கள். இதில் 6 வயதிற்குட்பட்ட சிறுமிகள் குழுவாக நடனமாட மேடைக்கு வந்தனர். அப்போது பெலா என்ற சிறுமி பயத்தில் அழுதுகொண்டே நிற்க, இதைப் பார்த்த தந்தை மேடைக்கு விரைந்து வந்தார். கையில் ஏற்கனவே ஒரு கைக் குழந்தையை வைத்திருந்த நிலையில் டீச்சரை பார்த்துக்கொண்டே தனது மகளுடன் சேர்ந்து நடனமாடினார்.

தந்தை உடன் இருக்கும் மன தைரியத்தில், மகளும் நடனமா தொடங்கினாள். இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

×Close
×Close