வைரல் வீடியோ: குடிபோதையில் காளைகளின் சண்டையை விலக்கி விட சென்றவருக்கு நேர்ந்த கதி!

குடிக்காரன் பேச்சு விடிஞ்ச போச்சு” என்ற பழமொழியும் உள்ளது. ஏனென்றால் குடிப்பவர்கள் எப்போதும் சுயநினைவிலேயே இருக்க மாட்டார்களாம்.

By: Published: March 27, 2018, 3:37:06 PM

சட்டிஸ்கர் மாநிலத்தில் குடி போதயில் இருந்த நபர், காளைகளின் சண்டையை விலக்கி விட சென்ற போது அந்த காளைகளால் முட்டி தூக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

குடித்து விட்டால் போதும் சிலருக்கும் நாம் எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்றே தெரியாது. ’குடிக்காரன் பேச்சு விடிஞ்ச போச்சு” என்ற பழமொழியும் உள்ளது.  ஏனென்றால் குடிப்பவர்கள் எப்போதும் சுயநினைவிலேயே இருக்க மாட்டார்களாம்.

இந்த உலகத்திலியே நாம் தான் பலசாலி. தன்னால் எதுவேண்டுமாலும் செய்து முடிக்க முடியும் என்ற எண்ணம் குடித்தப் பின்பு அவர்களுக்கு மேலூங்கி விடுமாம். அதனால் தான் பெரும்பாலும் குடிப்பவர்கள் மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கூட கேட்பதில்லையாம்.

சமூக வலைத்தளங்களில் குடிக்காரர்களின் வீடியோ அடிக்கடி வைரல் ஆவதுண்டு.  குடிபோதையில்  அவர்கள் செய்யும் செயல்கள் பல, பார்ப்பவர்கள் சிரிப்பை வர வைப்பதுண்டு. அந்த வகையில் தற்போது சட்டிஸ்கர் மாநிலத்தில் குடி போதையில் நல்லது செய்ய சென்ற நபருக்கு நேர்ந்த சோகமான சம்பவம் பார்ப்பவருக்கு சிரிப்பை வரவைத்துள்ளது.

பரபரப்பாக இருக்கும் அந்த தெருவில் இரண்டு காளைகள் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டுக் கொள்கின்றன. அப்போது குடித்து விட்டு ஒரு நபர், அந்த காளைகளை சண்டையிடாதீர்கள்.. வேண்டாம்.. நிறுத்துங்கள் என்று தடுக்க முயல்கிறது. அதன் பின்பு அவருக்கு நேர்ந்த கதியை வீடியோவில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்…

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Video drunk man tries to stop two bulls from fighting heres what happens next

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X