பெற்ற குழந்தைகளை இழத்தலைவிட பெரும் வலியை தரக்கூடியது வேறொன்றும் கிடையாது. சீனாவில் கடத்தப்பட்ட 6 வயது மகனை, 9 மாதங்கள் கழிந்து கடைத் தெருவொன்றில் கடத்தல்காரர்களிடமிருந்து ஒருவர் மீட்கும் உணர்ச்சிகரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவின் ஜிங்சின் மாகாணத்தை சேர்ந்தவர் சென் ஜோங்காங்க். இவருடைய 6 வயது மகன் செங் ஜியாஃபு 9 மாதங்களுக்கு முன் கடத்தப்படுகிறான். போலீஸார் எவ்வளவோ முயன்றும் அச்சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், 9 மாதங்கள் கழித்து சிறுவனின் தந்தை கடைவீதி ஒன்றில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது, தன் மகனை இரு சக்கர வாகனத்தில் யாரோ சிலர் வைத்திருப்பதை பார்க்கிறார். உடனே அவர்களிடமிருந்து தன் குழந்தையை மீட்டு, கடத்தல்காரர்களை போலீஸாரிடம் ஒப்படைக்கிறார்.