viral video: சீனாவில், பட்டத்தின் கயிற்றில் ஒரு நபர் 100 அடி உயரத்துக்கு பறந்த பரபரப்பான வீடியோ வட சீனாவில் உள்ள டாங்ஷான் நகரில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வானத்தில் பட்டங்களுடன் ஒரு மனிதன் பறப்பது கனவு போல தெரிகிறது. இருப்பினும், ஒரு மனிதன் பட்டத்தின் கயிற்றில் தரையில் இருந்து நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் பறக்கும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
இந்த சாத்தியமில்லாத சம்பவம் வடக்கு சீனாவில் உள்ள டாங்ஷானில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் எப்போது நடந்தது என தேதி குறிப்பிடப்படாத இந்த வீடியோ ஞாயிற்றுக்கிழமை நியூயார்க் போஸ்ட் (@nypost) மூலம் ட்விட்டரில் பகிரப்பட்டது.
இந்த வீடியோவில், அந்த நபர் வானத்தில் பறந்துகொண்டிருக்கும் போது ஆரவாரம் செய்வதைப் பார்க்கலாம். ஒரு கட்டத்தில், அவர் மீண்டும் பறக்க முயற்சிக்கும் முன் அவர் மீண்டும் தரை இறங்குகிறார்.
இந்த வீடியோவைப் பதிவுசெய்த நபர், இப்போது தனது முதல் பெயரான தாவோவால் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளார். நியூயார்க் போஸ்ட்டிடம், பட்டங்களுடன் சேர்ந்து பறக்கத் தேர்ந்தெடுத்த தனது நண்பரிடம் வேண்டுமென்றே இதைச் செய்ததாகக் கூறினார். மேலும், அவர் விளக்கினார், “பட்டத்தின் கயிறு தொழில்முறை தயாரிப்பாளரால் செய்யப்பட்டது. பட்டத்தில் பறக்கும்போது நாங்கள் பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். அதனால், எந்த பிரச்சனையும் இருக்காது. நிச்சயமாக, தொழில் வல்லுநர்கள் மட்டுமே இப்படி பறக்கத் துணிவார்கள்” என்று கூறினார்.
பட்டம் கடை வைத்திருக்கும் தாவோ, கெவ்லர் பட்டத்தின் கயிறில் பறப்பது ஆபத்தானது அல்ல என்று வலியுறுத்தினார்.
2021 டிசம்பரில், இலங்கையில் இருந்து இதே போன்ற வீடியோ வைரலானது. வானத்தில் பறந்த பட்டத்தால் ஒருவர் வானத்தில் தூக்கிச் செல்லப்படுவதை வீடியோவில் பதிவாகி இருந்தது. உள்ளூர் தகவல்களின்படி, அந்த நபர் சணல் கயிறுகளால் கட்டப்பட்ட ஒரு பெரிய காத்தாடியை பறக்கவிட முயன்றார். ஆனால்,, எதிர்பாராதவிதமாக பலத்த காற்று வீசியதால், காற்றின் வேகம் அதிகரித்து, கட்டுப்பாட்டை இழந்த பட்டம் அவரை தூக்கிச் சென்றது. அதிர்ஷ்டவசமாக, அந்த இளைஞர் பத்திரமாக தரையிறங்கினார். கீழே விழுந்ததில் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“