வைரலாகும் வீடியோ: கர்நாடகாவிற்கு சென்ற ராகுல் இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்!!!

அதன் பின்பு அது மாலை என்று தெரிந்ததும் மகிழ்ச்சியில் தொண்டரை பார்த்து கையசைத்தார்.

காங்கிரஸ்  கட்சித் தலைவர்  ராகுல் காந்தி,  கர்நாடகாவின்   சாலை வழியே சென்ற போது, அவருக்கு காங்கிரஸ் தொண்டர் ஒருவர் அளித்த பரிசு இணையத்தில் பரவி வருகிறது.

வரும், மே மாதம் 12 ஆம் தேதி கர்நாடகா சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் வருகிற 17 ஆம்  தேதி தொடங்கும் நிலையில்.அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சுறுசுறுப்பு அடைந்து வருகிறது. இதையொட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகத்தில்  ஐதராபாத்-கர்நாடக, மும்பை கர்நாடகம் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த நிலையில் ராகுல்காந்தி கர்நாடகாவின்  டம்குர் என்ற பகுதியில் சாலை வழியாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.  காரில் நின்றபடியே ராகுல் சென்றார். அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும்  ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பூக்களை தூவியும்,  முழக்கங்களை எழுப்பியவாறும் காங்கிரஸ் தொண்டர்கள் ராகுலை வரவேற்றனர். அப்போது தூரத்தில் நின்றுக் கொண்டிருந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர், திடீரென்று மாலை ஒன்றை ராகுலை நோக்கி வீசினார். அந்த மாலை சரியாக  பாய்ந்து சென்று ராகுலின் கழுத்தில் விழுந்தது.

சற்று நேரத்தில், பயந்த ராகுல்,  அதன் பின்பு அது மாலை என்று தெரிந்ததும் மகிழ்ச்சியில் தொண்டரை பார்த்து கையசைத்தார்.

https://twitter.com/bkrs100/status/981553988410617862

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி  வருகிறது.  கர்நாடகாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடன் வரவேற்பு மேலும், மேலும் அதிகரித்து வருவதை இந்த தொண்ட்ரின் பரிசு காட்டுவதாக காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

 

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Video garland thrown at rahul gandhi lands perfectly around his neck during karnataka roadshow

Next Story
எட்டிப்பிடித்தால் பக்கத்து நாடு! இருநாட்டு எல்லைகள்.Two country borders
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com