தென்னாப்பிரிக்காவில் உள்ள விலங்கியல் பூங்காவின் உரிமையாளரை அங்கிருக்கும் சிங்கம் கடித்து குதறிய காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் தபாஸ்ம்பி நகருக்கு அருகே உள்ளது லிம்போபோ விலங்கியல் பூங்கா . மிகவும் புகழ்பெற்ற வன உயிரியல் பூங்காவான இங்கு, நாள் தோறும் பல்லாயிர சுற்றுளா வாசிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த பூங்காவில் உள்ள சிங்கம் ஒன்று, அதன் உரிமையாளரையே கடித்து தூக்கி எறியும் வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
சம்பவதன்று, குகையில் இருக்கும் சிங்கம், பார்வையாளர் பகுதிக்கு அருகே நடை போட்டுக் கொண்டிருந்தது. அப்போது, பூங்கா உரிமையாளரான ஹோட்ஜ் உள்ளே சென்று அதை மிரட்ட நினைக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிங்கம் கோபத்தில் அவரை தரதரவென இழுத்து செல்கிறது.
ஹோட்ஜ் அலறி அதித்து ஓடிய போதும், அவரை விடாமல் அந்த சிங்கம், அவரை கவ்வி இழுந்து சென்றது. பார்வையாளர்கள் கூச்சலிட்டதை அடுத்து, பூங்கா காவலர்கள் துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கி சட்டம் கேட்டதும் அந்த சிங்கம் ஹோட்ஜை விட்டு விட்டு தப்பிச் சென்றது. சிங்கம் தாக்கியதில் ஹோட்ஜ் பலத்த காயமடைந்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பூங்கா உரிமையாளரை சிங்கம் தாக்கும் வீடியோக்கள் தற்போய்ஜி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
,