'தல' தோனியின் மகள் ஜிவா தோனி, உருளைக் கொண்டு சப்பாத்தி மாவை வட்டமாக உருவாக்கும் வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. இல்லத்தரசிகளில் பலருக்கும் இன்னமும் சப்பாத்தியை வட்டமாக போடத் தெரியாது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆங்கிளில் இருக்கும். ஆனால், பால் மனம் மாறாத ஜிவா, அருமையாக சப்பாத்திக்கு மாவை ரெடியாக்குகிறார். அந்த வீடியோ ஜிவாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நாம் நிச்சயம் பாராட்ட வேண்டியது சாக்ஷி தோனியைத் தான்.. தோனி உண்மையிலயே லக்கி மேன் தான்.