வீடியோ: தொலைக்காட்சி விவாதத்தில் பெண் வழக்கறிஞரை அறைந்த ஆண்

வட இந்தியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவரை ஆண் பேச்சாளர் அறையும் காட்சி வைரலாகி வருகிறது.

இஸ்லாம் மதத்தில் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டுமெனில், மூன்று முறை ‘தலாக், தலாக், தலாக்’ என்று கூறி வந்தனர். இதன் மூலம் இரு தம்பதிகளுக்கும் இடையே இருந்த உறவை முடித்துக்கொள்ளும் செயலில் ஈடுபட்டனர். முஸ்லீம் கணவர்களின் இந்த முடிவினால், பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனவே முத்தலாக்கை எதிர்த்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது குறித்து வட இந்தியாவில் உள்ள இந்தி மொழி தொலைக்காட்சியில் விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் முத்தலாக்கிற்கு ஆதரவாக முப்தி இஜாஸ் அர்ஷத் காஸ்மி என்ற நபர் விவாதித்தார். மேலும் இதனை எதிர்த்து ஃபரா ஃபெயிஸ் என்ற பெண் வழக்கறிஞர் பேசினார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோவமடைந்த ஃபரா, முத்தலாக்கை ஆதரித்த காஸ்மியை கன்னத்தில் அறைந்தார். உடனே பதிலுக்கு காஸ்மியும் ஃபராவை கடுமையாக தாக்கத் தொடங்கினார். இந்த வீடியோவை அந்த தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, விவாதம் நடத்திய தனியார் தொலைக்காட்சி போலீசாரிடம் புகார் அளித்தனர். பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு காஸ்மி கைது செய்யப்பட்டார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close