New Update
/
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Coimbatore: கோவையின் காவல் தெய்வம் என மக்களால் அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டுவிட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், ஆண்டுதோறும் வெகு விமர்சியாக நடைபெறும் கோனியம்மன் கோவில் திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம் என ஒவ்வொரு வாகனத்திலும் அம்மன் பவனி வந்து அனைத்து பக்தர்களுக்கும் காட்சியளித்து அருள் பாலித்தார்.
இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் எழுந்தருளிய தேர் ராஜவீதியில் தேர்திடலில் இருந்து புறப்பட்டு ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் தேர் திடலை அடைந்தது. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து,தேர் மீது உப்பு வீசி வழிபட்டனர்.
இந்த நிலையில், இந்த தேர் திருவிழாவையொட்டி வரும் பக்தர்களுக்கு மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒப்பணக்கார வீதி அத்தர் ஜாமத் பள்ளி வாசல் இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில்களை கொடுத்து அனைவரையும் வரவேற்றனர். இந்த சம்பவம் பக்தர்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கோனியம்மன் தேர் திருவிழா: பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில் கொடுத்த இஸ்லாமியர்கள் - நெகிழ வைக்கும் வீடியோ!https://t.co/gkgoZMHWlc | #Coimbatore | 📹 @rahman14331 pic.twitter.com/KHfAinTozL
— Indian Express Tamil (@IeTamil) February 28, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.