வைரல் வீடியோ: 24 ஆவது மாடியிலிருந்து குதித்த நபர் உயிர் பிழைத்த அதிசயம்!

சாகசத்திற்காக செய்த இந்த செயல் இறுதியில் விபத்தில் முடிந்துள்ளது.

ஸ்வீடன் நாட்டில் 24 ஆவது மாடியிலிருந்து குதித்த நபர், அதிர்ஷட்டவசமாக உயிர் பிழைத்த அதிசயம் இணையத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஸ்வீடன் நாட்டில் உள்ள ஒருவர், சாகச முயற்சிக்காக 246 அடி உயரம் கொண்ட 24 மாடி கட்டிடத்தில் இருந்து குதிக்க முடிவெடுத்துள்ளார். அதன்படி, தனது பாராசூட்டை மாற்றிக்கொண்டு, 246 அடி உயரம் கொண்ட கட்டிடத்தில் இருந்து குதித்துள்ளார். ஆனால்,  சாகசத்திற்காக செய்த இந்த செயல் இறுதியில் விபத்தில் முடிந்துள்ளது.

கட்டிடத்தின் உச்சியில் இருந்துக் கொண்டு அந்த நபர், தான் கீழே குதிக்க இருப்பதாக அறிவிக்கிறார். இதனைப்பார்த்த அனைவரும் பயம்கலந்த பிரம்பில் அவரின் சாகசத்தை அன்னாந்து பார்க்கின்றனர். அத்துடன், தங்களின் மொபைல்களிலும், அவர் மேலிருந்து கீழே குதிக்க போகும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்கின்றனர்.

எந்த வித பாதுகாப்பு கவசமின்றி, பாராசூர் துணையுடன் அந்த நபர் 24 ஆவது மாடியின் உச்சத்திலிருந்து குதிக்கிறார். அப்போது, திடீரென்று நிலைதடுமாறி அதிக வேகத்துடன் கீழே வந்து விழுந்துள்ளார். அவரின் உடலில் இருந்த பாராசூட் சரியாக செயல்படாமல் போனதால், அந்த சாகச வீரர் கீழே விழ நேரிட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த அனைவரும் கூறியுள்ளனர். மேலும், இந்த கோர விபத்தில், சாகச வீரர் சிறு காயங்களுடன் அதிர்ஷடவசமாக உயிர் பிழைத்துள்ளார். 24 ஆவது மாடியின் உச்சத்திலிருந்து அவர் கீழே குதிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close