திகில் வீடியோ: காருடன் நேருக்கு நேர் மோதிய ரிச்சாவை பார்த்து, பயந்து நின்ற பொதுமக்கள்!

நெட்டிசன்கள் சிலர், அந்த ரிச்சாவில் பேய் இருந்ததால் தான் அப்படி சுற்றியது என்று வதந்திகளை பரப்பி வருகின்றன.

சீனாவில்,  காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளான ரிச்சா ஒன்று, 5 நிமிடம் இடைவிடாமல் சுற்றியதைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சீனாவின் சிஜிடிஎன் தொலைக்காட்சி சீனாவில் பிரதான சாலையில் நடைபெற்ற விபத்து ஒன்றை வீடியோவாக வெளியிட்டது. இந்த வீடியோ அங்குள்ள சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.  போஜோ சிட்டியின் மெயின் ரோட்டில் இந்த விபத்து நடந்துள்ளது.

சிக்னல் போடப்பட்டிருப்பதை சரியாக பார்க்காத கார் ஒன்று வேகமாக செல்கிறது. அதன் நேர் எதிர் திசையில் மற்றொரு ரிச்சா ஒன்று  வேகமாக வந்து, காருடன் வேகமாக மோதுகிறது. இந்த கோரவிபத்தில், ரிச்சாவில் இருந்த டிரைவர் தரையில் விழுந்து விடுகிறார். ஆனால், அந்த ரிச்சா தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு சாலையில் வேகமாக சுற்றுக்கிறது.

இதைப்பார்த்துக் கொண்டிருக்கும், ட்ராஃபிக் போலீஸ் ஒருவர், வேகமாக ஓடி வந்து ரிச்சாவை நிறுத்த முயற்சிக்கிறார். ஆனால் அவரின் முயற்சியும் தோல்வியில் முடிகிறது. இறுதியாக , இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் பயத்தில் நகர்ந்து செல்கின்றன. அதன் பின்பு 5 பேர் கொண்ட  கும்பல் ஒன்றாக சேர்ந்து சுற்றிக் கொண்டிருக்கும் ரிச்சாவை நிறுத்துக்கின்றனர். அதன் பின்பு, ரிச்சாவில் இருந்து கீழே  விழுந்துக்கிடந்த நபரை தூக்கி முதலுதவி அளிக்கின்றனர்.

இந்த வீடியோ அங்குள்ள இணையதளங்களில், ட்ரெண்ட் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல், நெட்டிசன்கள் சிலர், அந்த ரிச்சாவில் பேய் இருந்ததால் தான் அப்படி சுற்றியது என்று வதந்திகளை பரப்பி வருகின்றன.

×Close
×Close