தாய்லாந்தில் படம் வரையும் யானை; வைரலான வீடியோ… இணையத்தில் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

நோங் தன்னுடைய தோழி டம்போவுடன் இருப்பது போல் வரையப்பட்ட அந்த படத்தினை நல்ல விலைக்கு வாங்கியுள்ளனர். மேலும் இந்த வீடியோவையும் கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கு மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

Video of elephant painting on canvas in Thailand goes viral : தாய்லாந்தில் 9 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று படம் வரையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நவ் திஸ் என்ற நியூயார்க்கை தளமாக கொண்டு செயல்படும் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தி அறிக்கை ஒன்றில் நோங் தன்வா என்று பெயர் கொண்ட யானை வரைந்த படம் ஒன்று ரூ. 4,10,624க்கு ஏலம் போனது. மீடோங் யானைகள் முகாமில் இருக்கும் இந்த யானை வரைந்த படம் மிகவும் அழகாகவும் பிரமிக்க வைக்கும் அளவிற்கும் இருந்துள்ளது.

நோங் தன்னுடைய தோழி டம்போவுடன் இருப்பது போல் வரையப்பட்ட அந்த படத்தினை நல்ல விலைக்கு வாங்கியுள்ளனர். மேலும் இந்த வீடியோவையும் கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கு மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

ஆனால் பலரும் யானைகளை இப்படி துன்புறுத்தி தானா படம் வரைய வேண்டும்? ஏன் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறார்கள். இது விலங்குகளை துன்புறுத்தும் செயல் என்றும் கூறியுள்ளனர். யானையை பழக்கும் நபர் கையில் இருக்கும் ஒரு அங்குசத்தை பலரும் சுட்டிக் காட்டி ஏன் இவ்வாறு யானையை கட்டாயப்படுத்தி ஒரு முட்டாள் தனமான காரியத்தில் ஈடுபடுத்த வேண்டுமென்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Video of elephant painting on canvas in thailand goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com