New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/04/3-10.jpg)
இரண்டே நாட்களில் இந்த வீடியோமில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
கேரளாவில் சிறுமி ஒருவர், எந்தவித உபகரணமும் இல்லாமல் நான்கு கால் பாய்ச்சலில் மரம் ஏறும் வீடியோ ஒன்று, இணையத்தை கலக்கி வருகிறது.
இன்றைய இணைய உலகில், ஒரு நிகழ்வை உலகறிய செய்ய வேண்டும் என்றால், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இணையதளங்களில் அக்கோண்ட் வைத்திருந்தால் போதும். பட்டித் தொட்டி எங்கும் பரவிடும். அதுப்போல் கடந்த இரண்டு தினங்களாக இணையத்தில் ஒரு வீடியோ வைராலாக பரவி வருகிறது.
கேரளாவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, பார்ப்பவரையும் பிரமிக்க வைத்துள்ளது. மரம் ஏறுவதும் கடினமாக காரியம் தான். அதிலும் தென்னை மரம் ஏறுவது என்பது நன்கு பழக்கப்பட்டவர்களுக்கே சற்று பயத்தை தரும். காரணம், அதன் உயரம் மற்றும் வழுக்கும் தன்மை.
ஆனால், கேரளாவில் 5 வயது சிறுமி ஒருவர், தென்னை மரத்தில் எந்தவித உபகரண உதவியும் இல்லாமல் அசால்ட்டாக மரத்தில் நான்கு கால் பாய்ச்சலில் ஏறி அனைவரையும் அன்னாந்து பார்க்க வைத்துள்ளர். இந்த வீடியோ கடந்த மார்ச் 30 ஆம் தேதி இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இரண்டே நாட்களில் இந்த வீடியோமில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு முன்பு, எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரின் கவனத்தையும் பெற்று வருகிறது. கோடைக்காலம் என்பதால் தென்னை மரம் குறித்து வீடியோ தற்போது வைரலானதோ என்னவோ?...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.