New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/king-cobra_1200_twt.jpg)
பாம்பை பார்த்தால் படையே நடங்கும் என்று சொல்வார்கள். அது நேரில் பார்த்தால் மட்டும் அல்ல, இணையத்தில் பார்த்தாலும் கூட அய்யோ என்று ஓட சொல்கிறது.
Video of huge King Cobra : பாம்பை பார்த்தால் படையே நடங்கும் என்று சொல்வார்கள். அது நேரில் பார்த்தால் மட்டும் அல்ல, இணையத்தில் பார்த்தாலும் கூட அய்யோ என்று ஓட சொல்கிறது. அப்படியான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
One of the longest #KingCobra sighted in recent times near the Girinagar area of Paonta Sahib in Sirmaur district in #HimachalPradesh@SaevusWildlife @moefcc@WWFINDIA pic.twitter.com/BNG6hZwjg5
— DD News (@DDNewslive) June 6, 2021
ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்தவாரம் கிரிநகர் பகுதியில் ஒரு ராஜநாகம் தன்னுடைய புற்றில் இருந்து வெளியேறும் காட்சி மூச்சடைக்க வைத்துள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தின் வனத்துறையினர், உலகில் படம் பிடிக்கப்பட்ட/ ஆவணப்படுத்தப்பட்ட மிக நீளமான விஷப்பாம்பு இது தான் என்று கூறுகின்றனர்.
ஒன்றரை நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோ ஒன்றில் சர்வசாதாரணமாக மோசமான நிலப்பரப்பில் மேலே ஊர்ந்து செல்கிறது இந்த ராஜநாக பாம்பு. இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடீயோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.