யானையை காப்பாற்ற மகாநதியில் சென்று உயிரிழந்த மீட்புக் குழு; அதிர்ச்சி அளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு

சந்தாகாவில் இருந்து பங்கனிக்கு மகாநதியை கடந்து சென்றது 17 யானைகள் அடங்கிய குழு. மூன்று யானைகள் மட்டும் நதியில் சிக்கிக் கொள்ள மற்ற யானைகள் கரையேறிவிட்டன

சந்தாகாவில் இருந்து பங்கனிக்கு மகாநதியை கடந்து சென்றது 17 யானைகள் அடங்கிய குழு. மூன்று யானைகள் மட்டும் நதியில் சிக்கிக் கொள்ள மற்ற யானைகள் கரையேறிவிட்டன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Video of of Elephant rescue attempt turns tragic

Video of of Elephant rescue attempt turns tragic : பருவமழை காரணமாக இந்தியாவில் உள்ள பல்வேறு நதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்ட்ள்ளனர். இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு மகாநதியை கடக்க முயன்ற இரண்டு யானைகளை காக்கும் முயற்சியில் நதிக்குள் சென்ற மீட்புக் குழுவினர் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில் அவர்கள் யானையை மீட்க சென்ற காட்சிகள் மற்றும் விபத்துக்கு ஆளான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஹீராகுட் அணை தன்னுடைய முழு கொள்ளளவை எட்டியதால் அதில் இருந்து உபரி நீர் வெளியிடப்பட்டது. இதன் மூலமாக மகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் முண்டலி பாலம் அருகே மகாநதியை கடக்க முயன்ற யானைகளை ஒடிசா பேரிடர் மீட்புக் குழு சென்றது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் யானையை மீட்க அதிகாரிகள் சென்ற படகு அடித்து செல்லப்பட்டது. எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும் அந்த படகை சீரான நிலைக்கு கொண்டு வர இயலவில்லை.

வேகமாக சென்ற படகு, பாலத்தின் தூணில் இடிபட்டு ஆற்றுக்குள் கவிழ்ந்தது. மீட்புக் குழுவில் பயணித்த அதிகாரி சீதாராம் முர்முவை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுவினருடன் சென்ற ஓ.டி.வி. ஊடகவியலாளார் அரிந்தம் தாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீடியோ தயாரிப்பாளர் ப்ரபாத் சின்ஹா காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment
Advertisements

சந்தாகாவில் இருந்து பங்கனிக்கு மகாநதியை கடந்து சென்றது 17 யானைகள் அடங்கிய குழு. மூன்று யானைகள் மட்டும் நதியில் சிக்கிக் கொள்ள மற்ற யானைகள் கரையேறிவிட்டன. மூன்று யானைகள் இரண்டு யானைகள் தடுமாறி கரையேறிய நிலையில் ஒரே ஒரு யானை மட்டும் 6 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது. 20 மீட்டரை கடந்திருந்தால் அந்த யானை கரையை அடைந்திருக்கும். யானைக்கு தேவையான உணவுகளை அளித்து, வலை பாதுகாப்பு போட்டு அதனை பத்திரமாக ஒரு இடத்தில் நிலை நிறுத்தி வைத்திருந்தனர் வனத்துறையினர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று கூறிய வனத்துறை, மீட்புக் குழுவின் படகில் எப்படி இரண்டு ஊடகவியலாளர்கள் பயணித்தனர் என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: