Advertisment

சிங்கமென கர்ஜித்த எஸ்.ஐ மோகன்.. போராட்டம் செய்த பாஜக தொண்டர்களை மிரள வைத்த கம்பீரம்!

"சவுண்டுவுட்டா நீங்கெல்லாம் என்ன பெரிய ஆளா?"

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
எஸ்.ஐ மோகன்

எஸ்.ஐ மோகன்

கன்னியாகுமரியில் கேரள பேருந்தை வழிமறித்த பாஜக தொண்டர்களை எஸ்.ஐ மோகன், சிங்கமென கர்ஜித்து மிரட்டிய வீடியோ காட்சிகள் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

Advertisment

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா  சபரிமலை தீர்ப்புக்கு பின்பு தொடர்ந்து பதற்றத்துடனே காணப்பட்டு வருகிறது.  சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம்  என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும்  எதிர்புகள் கிளம்பின. கேரளாவில்  போராட்டங்கள் வெடித்தன.  தீர்ப்புக்கு பின்பு  சபரிமலை நடை  திறக்கப்படும் போதெல்லாம்  பெண்கள் உள்ளே  செல்ல முயன்று வருகின்றனர். அந்த வகையில் கடந்த  3 ஆம் தேதி   இரண்டு பெண்கள்  விடியற்காலையில்  சபரிமலைக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இவர்கள் சென்ற வீடியோ மற்றும் தகவல்கள்  ஊடகங்களில் வெளியானது. இதனால் அங்கு கலவரம் வெடித்தது. கல்வீச்சில்  ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  நேற்று முன் தினம் கேரளாவில் முழு அடைப்பு போராட்டமும் நடைப்பெற்றது.

எஸ்.ஐ. மோகன் கம்பீர பேச்சு:

அந்த போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியினருக்கும்,மார்க்ஸிஸ்ட் கட்சித் தொண்டர்களும் கடும் மோதல் ஏற்பட்டது.இதனால் கேரளாவில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர் .இந்த பதற்றம் தமிழ்நாடு,கேரள எல்லையிலும் நீடித்தது.

இதன் உச்சமாக தமிழக எல்லையான களியக்காவிளையில் கேரள பேருந்து ஒன்று  பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. அப்போது அந்த பகுதியில் திரண்டு இருந்த பாரதிய ஜனதா தொண்டர்கள்,திடீரென கேரள அரசு பேருந்தை வழிமறைத்து,பேருந்தையும் அதன் ஓட்டுநரையும் தாக்க முற்பட்டனர்.இதனால் அந்த பகுதியில் பதற்றமும்,பரபரப்பும் ஏற்பட்டது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர்,பாரதிய ஜனதா தொண்டர்களை கலைந்து போகுமாறு எச்சரித்தனர். இருந்த போது போராட்டக்காரர்கள் அங்கிருந்து நகர்ந்து செல்லவில்லை.  தொடர்ந்து  கோஷங்களை எழுப்பியவாறு சத்தமிட்டு ரகளையில் ஈடுப்பட்டனர்.

இதனால் கோபமடைந்த  அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த,களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன், பாரதிய ஜனதா கட்சியினரைப் துரைசிங்கம் ஸ்டைலில் விரட்டியடித்தார்.

“சவுண்டுவுட்டா நீங்கெல்லாம் என்ன பெரிய ஆளா?" பேருந்து அரசு சொத்து. அது மேல வன்முறையை காட்டுறது தப்பு” என கம்பீர குரலில் அவர் கர்ஜித்த தோனி பாஜக் தொண்டர்களை மிரள வைத்தது. பின்பு அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தனது உயிரை காப்பாற்றிய எஸ்.ஐ மோகனுக்கு பேருந்து ஓட்டுநர் தனது நன்றியை தெரிவித்தார். அத்துடன் தனது அதிரடி ஆக்‌ஷனால் போராட்டக்காரர்களை விரட்டி அடித்த எஸ். ஐ மோகனின் செயலை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Social Media Viral Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment