வைரல் வீடியோ: பாட்டு பாடி தலைமை ஆசிரியரிடம் விடுமுறை கேட்கும் சுட்டி சிறுவன்

பாகிஸ்தானில் பள்ளி மாணவர் ஒருவர் ஆசிரியரிடம் பாட்டு பாடி விடுமுறை கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானில் பள்ளி மாணவர் ஒருவர் ஆசிரியரிடம் பாட்டு பாடி விடுமுறை கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பள்ளியில் மாணவர்கள் பெரும்பாலும் கடிதம் மூலமாகவே விடுமுறை கேட்பர். ஆனால், பாகிஸ்தானில் சிறுவன் ஒருவன், ஆசிரியர் முன்பு பாட்டு பாடி விடுமுறை கேட்கும் வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பாகிஸ்தானிய பாடகரும், மனித உரிமை ஆர்வலருமான ஷெஹ்சாத் ராய் இந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த வீடியோவில், ”தலைமை ஆசிரியர் அவர்களுக்கு, என் பெயர் கோர்வால். எனக்கு உடல்நிலை சரியில்லை. என்னால் பள்ளிக்கு வர இயலாது. எனக்கு தயவுகூர்ந்து ஒருநாள் விடுப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி”, என பாடுகிறான்

இந்த வீடியோவை பாடகர் ஷெஹ்சாத் ராய், “இவனுக்கு தயவுசெய்து விடுமுறை அளியுங்கள்”, என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close