உன்னை யாருடா முத்தம் கொடுக்க சொன்னது? - திருமணத்தில் நிகழ்ந்த 'இச்' சம்பவம்!

அப்போது போட்டோகிராஃபர், புதுமண ஜோடியை முத்தமிட்டுக் கொள்ளுமாறு கூற, அந்த பொடியனோ நம்மளைத் தான் சொல்கிறார்கள் போல...

பிலிப்பைன்ஸில் நடந்த ஒரு திருமணத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம் இது.

பிலிப்பைன்சைச் சேர்ந்த ஆல்ஃப்ரெட் லு மற்றும் ஜமைக்கா ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது புதுமணத் தம்பதிகள் தங்கள் நண்பர்களுடன் நின்றுக் கொண்டு, போட்டோக்களுக்கு வித விதமாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர். போட்டோகிராஃபர் கொடுக்கும் இன்ஸ்டிரக்ஷனுக்கு ஏற்றவாறு ஜோடி போஸ் கொடுத்தது.

அந்த தம்பதியின் அருகே நின்றுக் கொண்டிருந்த பேஜ் பாயாக (page boy) ஒரு சிறுவனும் Flower girl-ஆக சிறுமியும் நின்றுக் கொண்டிருந்தனர். பேஜ்பாய் என்பது சில மேற்கத்திய திருமணங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கடைபிடிக்கப்படும் வழக்கம்.

அப்போது போட்டோகிராஃபர், அந்த சிறுவனையும், சிறுமியையும் கண்களை மூடச் சொல்லிவிட்டு, புதுமண ஜோடியை முத்தமிட்டுக் கொள்ளுமாறு கூற, அந்த பொடியனோ நம்மளைத் தான் சொல்கிறார்கள் போல என்று நினைத்து, எதிரே நின்ற சிறுமிக்கு ‘பச்சக்’ கொடுத்து விட, ‘அடேய்… நீ கொடுக்கக் கூடாது டா’ என அனைவரும் அவனை பிரித்து இழுக்க, ஒட்டுமொத்த மண்டபமே சிரிப்பலையில் மூழ்கியது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close