அமெரிக்காவில் விமானி ஒருவர் விமானத்தில் பெண் பயணி ஒருவருக்கு தன் காதலை தெரிவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அப்பெண், அதே விமானத்தில் வழக்கமாக பயணித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோவை அப்பெண் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். அதில், “இது ஒரு கனவு போல் உள்ளது. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள். எனது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றிகள். திருமணம் விமானத்தில் நடைபெறாது”, என தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில், விமானி அப்பெண்ணுக்கு மோதிரம் அணிவித்து தன் காதலை தெரிவிக்கிறார். அதற்கு அப்பெண் காதலை ஏற்றுக்கொண்டு முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இதனை விமானி சக பயணிகளிடம் தெரிவித்து சந்தோஷப்படுகிறார்.