scorecardresearch

வைரலாகும் வீடியோ: ’அவ்வா அவ்வா’ சாங் பாடி ரசிகர்களிடம் கலாய் வாங்கிய பிரியா வாரியர்!!

பிரியா வாரியர் பாடுவது கேட்டால் லைட்டாக கோபமும் வருவது உறுதி

வைரலாகும் வீடியோ: ’அவ்வா அவ்வா’ சாங் பாடி ரசிகர்களிடம் கலாய் வாங்கிய பிரியா வாரியர்!!

ஒரே நைட்டில் ஒபாமா ஆகிய இண்டர்நெட்  பிரபலங்கள் வரிசையில், முதலிடத்தில் இருந்த ’கண்ணழகி’ பிரியா பிரகாஷ் வாரியரை அவரின் ரசிகர்கள்  பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். காரணம்,  முதலில் அவரின் கண் எக்ஸ்பிரஷனைக் கண்டு  ஆஹா… ஓகோனு குதித்த இளைஞர்கள் இன்று அவர் பாடிய பாடலைக் கண்டு தெறித்து ஓடியுள்ளனர்.

சமீபத்தில்,  திருமண விழா ஒன்றில் கலந்துக் கொண்ட பிரியா வாரியர் தனது நண்பர்கள் கூட்டத்துடன் சேர்ந்து அவ்வா அவ்வா பாடலை பாடிகிறார். பாடும் போது அவர் தரும் எக்ஸ்பிரஷன்கள் ஓகே என்றாலும், அவரின் குரல் தான் சுமார் ரகம் இதை நாங்கள் சொல்லவில்லை. அதையும் அவரின் திவீர  ரசிகர்கள் தான் சொல்லி வருகிறார்கள்.

ஆனால், பிரியா வாரியர் எதை செய்தாலும் அதை ரசிப்பதற்காகவே ஒரு  திவீர கூட்டம் இருக்கும் இல்லையா?  அவர்கள் எல்லோருமே இந்த வீடியோவில் பிரியாவைவும், அவர் பாடுவதையும் ரசித்து  வருகின்றனர்.  ஆனால், ஓனிஜினல் அவ்வா அவ்வா சாங் கேட்டவர்களுக்கு பிரியா வாரியர் பாடுவது கேட்டால் லைட்டாக கோபமும் வருவது உறுதி.

பிரியா வாரியம் பாடும் அவ்வா அவ்வா..

 

ஒனிஜினல் அவ்வா அவ்வா…

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Video priya prakash varrier is breaking the internet with her expressions yet again

Best of Express